Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pumpkin Health Benefits: கண் பார்வைக்கு நல்லது… உடல் எடை குறையும் – பூசணியில் இவ்வளவு நன்மைகளா?

Pumpkin for Health: மாறி வரும் உணவுப் பழக்கத்தின் காரணமாக பலர் இளம் வயதிலேயே கடுமையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் பாரம்பரிய உணவுமுறைகளுக்கு திரும்புவதன் மூலம் இழந்த ஆரோக்கியத்தை மீட்கலாம். இந்த கட்டுரையில் பூசணிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Pumpkin Health Benefits: கண் பார்வைக்கு நல்லது… உடல் எடை குறையும் – பூசணியில் இவ்வளவு நன்மைகளா?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 08 Jun 2025 23:34 PM

இன்றைய வேகமான வாழ்க்கைமுறையிலும் தவறான உணவுப் பழக்கங்களால் பலரும் உடல்நலக் குறைபாடுகள், செரிமான பிரச்சனைகள், கண் பார்வை குறைவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். ஜங்க் ஃபுட் (Junk Food), எண்ணெய்யில் அதிக நேரம் பொறித்த உணவுகள்,  சர்க்கரை (Sugar) மிகுந்த பானங்கள் என இவையெல்லாம் உடலை அதிகமாக பாதித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், இயற்கையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயமாக  சேர்க்க வேண்டும். அந்த வகையில், நம் பாரம்பரிய உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கக்கூடியது தான் பூசணிக்காய் (Pumpkin).  இயற்கையான நன்மைகள் நிறைந்த இந்த காய், எடை குறைப்பு முதல் கண் பார்வை பாதுகாப்பு வரை, பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கும் ஒரு சக்திவாய்ந்த உணவுப் பொருள்.

பூசணிக்காய் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • பூசணிக்காய் பல ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்ட ஒரு காய்கறி. இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயனளிக்கும்.
  • பூசணிக்காயில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இவை செரிமானத்திற்கு உதவுவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். எனவே, எடை குறைக்க விரும்புவோருக்கு பூசணிக்காய் நன்மை பயக்கும்.
  • பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ நமது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கூடுதலாக, லுடீன் கண்புரை அபாயத்தைத் தடுக்கின்றன.
  • பூசணிக்காயில் உள்ள வைட்டமின்கள் நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன. பூசணிக்காயில் உள்ள வைட்டமின் சி, சளியை விரைவாக குணப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.
  • பூசணிக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும், இது புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
  • கூடுதலாக, அவற்றில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே, நீங்கள் தயக்கமின்றி இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • நேரடியாக பூசணிக்காயாக இல்லையென்றாலும் பூசணி விதையாகவும் எடுத்துக்கொள்ளலாம். பூசணிக்காயை விட பூசணி விதைகள் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும்.

பூசணிக்காயை எடுத்துக்கொள்ளும் முறைகள்

  • பாரம்பரிய முறையில் பூசணிக்காயை கூட்டு, மோர் குழம்பு, சாம்பார் போன்ற முறைகளில் எடுத்துக்கொள்ளலாம் இது செரிமானத்திற்கு உதவும். மேலும் அதில் உள்ள சத்துக்களும் நேரடியாக கிடைக்கும்.
  • வெறும் வெந்நீரில் பூசணிக்காயை வேக வைத்து, மிளகு தூள், இஞ்சி, பூண்டு சேர்த்துச் சூப்பாக தயாரிக்கலாம். இது இரவு உணவுக்கு மிகவும் ஏற்றது. அல்லது ஜூஸாகவும் பருகலாம்.
  • பூசணிக்காய் மசாலாவாக செய்து இடியாப்பம், இட்லி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
  • தினசரி உணவுகளில் மாற்றத்தைத் தேடுபவர்கள், பூசணிக்காயை பாசிப்பருப்புடன் சேர்த்து லேசாக இனிப்பு சேர்த்து பாயசமாக செய்யலாம்.
  • பூசணிக்காயை வேகவைத்து தயிர், இஞ்சி, வெந்தயம் போன்றவற்றுடன் சேர்த்து பச்சடியாகச் செய்யலாம். இது கோடை காலத்தில் மிகவும் குளிர்ச்சியான உணவாக இருக்கும்.
  • வறுத்த பூசணி விதைகளை ஸ்நாக்காக எடுத்துக்கொள்ளலாம்.
  • வேகவைத்த பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, சில மிளகு தூள், ஓலிவ் எண்ணெய், வெங்காயம் சேர்த்து சாலடாகவும் சாப்பிடலாம்.
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்...
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!...
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்...