Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோடைகாலங்களில் பைக்கில் ஏற்படும் பாதிப்புகள் – பராமரிப்பது எப்படி?

Summer Bike Care: கடுமையான கோடையில் உங்கள் பைக் பாதுகாப்பாக இயங்க, முறையான பராமரிப்பு அவசியம். டயர், பிரேக், ஆயில் மற்றும் ஏர் ஃபில்டர் பராமரிப்புகள் நமது பயண அனுபவத்தை மேம்படுத்தும்.கோடைகாலங்களில் பைக்கை எப்படி பரமாரிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்

கோடைகாலங்களில் பைக்கில் ஏற்படும் பாதிப்புகள் – பராமரிப்பது எப்படி?
மாதிரி படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 10 Apr 2025 15:14 PM

இந்தியாவில் (India) இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்ப நிலை வழக்கத்தை விட மிகவும் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் (India Meteorological Centre) எச்சரித்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தினால் நமது உடல் நிலை மட்டுமல்ல அதிக வெப்பத்தினால் நம் வீட்டில் இருக்கும் எலக்டிரானிக் சாதனங்களும் பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக நமது பைக் (Bike), கார் போன்ற வாகனங்களும் இந்த வெயில் காலத்தில் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்படக் கூடும். இந்த வெயில் காலத்தில் பைக்கை பராமரிக்காமல் விட்டுவிட்டால் பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். பாதி வழியில் பைக் பிரேக் டவுன் ஆகி நமது பயணம் தடைபட வாய்ப்பு அதிகம். அது மட்டுமல்லாமல் முறையாமல் விட்டுவிட்டால் பெரும் விபத்துகளிலும் சிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் தான், கோடைகாலத்தில் பைக்குகளை முறையாக பராமரிப்பு மிகவும் அவசியம். இங்கு பைக்கை எப்படி பரமாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. டயர் மற்றும் பிரேக் பாதுகாப்பு

வெயிலில் நமது பைக் டயர்களில் வெப்பம் காரணமாக விரைவில் காற்று குறைய வாய்ப்பு இருக்கிறது. டயரில் காற்று குறைவாக இருந்தால் நாம் பைக்கை ஓட்டினால் டயரை பாதிக்கும். இதன் காரணமாக வாரந்தோறும் டயரில் காற்று அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். மேலும் பைக்கில் பிரேக்குகள் சரியாக வேலை செய்கிறதா என்பதை தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை பைக்கின் பிரேக்கில் எதுவும் பிரச்னை இருந்தால் அது முறையாக சரி செய்யப்பட வேண்டும். பிரேக் ஆயிலையும் 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

2. இன்ஜின் ஆயில் மற்றும் கூலிங் ஆயில் பராமரிப்பு

நமது பைக்கின் இன்ஜின் ஆயிலின் அளவை எப்பொழுதும் சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும். அது குறையும் பட்சத்தில் சரியான நேரத்தில் மாற்ற வேண்டும். இதனால் இன்ஜின் பழுதாகாமல் பார்த்துக்க கொள்ள முடியும். மேலும் அதிக வெப்பமான காலத்தில் இன்ஜின் அதிகம் சூடாகும், ஆகவே கூலிங் ஆயில் சரிபார்ப்பது அவசியம். தேவைப்படும் நேரத்தில் கூலிங் ஆயிலை அடிக்கடி மாற்ற வேண்டும்.

3. பைக் கவர் எனும் பாதுகாப்பு கவசம்

வெயில் சுட்டெரிக்கும் கோடைகாலங்களில் உங்கள் பைக்கை நேரடியாக சூரிய ஒளி படும்படி நிறுத்தி வைக்க வேண்டாம். ஒரு நல்ல பைக் கவர் உங்கள் வாகனத்தை யுவி கதிர் வீச்சில் இருந்து பாதுகாக்கும். மேலும் பைக் கவர் பைக்கின் நிறம் மங்காமல் இருப்பதற்கும், டயரை வெயிலில் பாதிப்படையாமல் தடுக்கவும் உதவும்.

4. ஏர் ஃபில்டர் கிளீனிங்:

கோடையில் தூசி அதிகம் இருக்கும் என்பதால் ஏர் ஃபில்டரில் தூசி சேர்ந்து இன்ஜினின் செயல்திறனை குறைக்கும். எனவே, ஏர் ஃபில்டரை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

 

மதுரை சித்திரைத் திருவிழா: ஆட்டுத்தோலால் பை செய்யும் பணி தீவிரம்!
மதுரை சித்திரைத் திருவிழா: ஆட்டுத்தோலால் பை செய்யும் பணி தீவிரம்!...
இன்று நடக்கு நீட் இளநிலை தேர்வு... 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
இன்று நடக்கு நீட் இளநிலை தேர்வு... 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு...
தொடங்கியது அக்னி நட்சத்திரம்.. வெப்ப அலை இருக்குமா?
தொடங்கியது அக்னி நட்சத்திரம்.. வெப்ப அலை இருக்குமா?...
வெயிலுக்கு ரெஸ்ட்.... வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?
வெயிலுக்கு ரெஸ்ட்.... வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?...
உடல் எடையைக் குறைத்தது எப்படி? நடிகை சாராவின் சீக்ரெட்
உடல் எடையைக் குறைத்தது எப்படி? நடிகை சாராவின் சீக்ரெட்...
பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!
பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!...
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!...
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!...
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!...
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?...
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு...