இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் டீன்ஸ் பெற்றோர் கட்டுப்பாடு.. மெட்டா அறிமுகம் செய்த அசத்தல் அம்சம்!

Meta Introduced Parental Control | மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் செயலியை ஏராளமான டீனேஜர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், டீனேஜர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் டீன்ஸ் பெற்றோர் பாதுகாப்பு அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் டீன்ஸ் பெற்றோர் கட்டுப்பாடு.. மெட்டா அறிமுகம் செய்த அசத்தல் அம்சம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Apr 2026 21:57 PM

 IST

தொழில்நுட்பம் வளர்ச்சி (Technology Development) அடைந்துக்கொண்டே செல்லும் நிலையில், அதற்கு ஏற்ப புதிய புதிய கண்டுபிடிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அத்தகைய அசத்தலான அம்சமாக செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) உள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், அதில் பல ஆபத்துகளும் உள்ளன. இந்த நிலையில் தான் டீனேஜர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மெட்டா (Meta) புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன அம்சம், அது எப்படி செயல்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாவின் ஏஐ அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா

மெட்டா தனது சமூக ஊடக செயலிகளான ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவற்றில் பல அசத்தலான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் பயனர்கள் செயலிகளுக்குள்ளேயே செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்திக்கொள்ள இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய செயலிகளில் மெட்டா ஏஐ அம்சத்தை அறிமுகம் செய்தது. இதனை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான், இந்த புதிய அறிவிப்பை மெட்டா வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : 9000mAh பெரிய பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் – சிறப்பம்சங்கள் என்ன?

ஃபேஸ்புக், இஸ்டாப்வில் பெற்றோர் கட்டுப்பாடு – மெட்டா புதிய அறிவிப்பு

ஃபேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட செயலிகளை ஏராளமான டீனேஜர்கள் பயன்படுத்தும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மெட்டா இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, சில சூழல்களில் செயற்கை நுண்ணறிவு அம்சம் ஆபத்தாக இருக்கும் நிலையில், அதில் இருந்து அவர்களை பாதுகாக்க ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரமில் டீனேஜர் பெற்றோர் கட்டுப்பாடு (Parental Control) அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப் செயலியில் வரப்போகும் வாட்ஸ்அப் பிளஸ்.. சோதனை!

அதாவது Insights என்ற புதிய டேபை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் என்ன என்ன தலைப்பை மெட்டா ஏஐ-ல் தேடியுள்ளனர் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். இந்த அம்சத்தின் மூலம் தங்களது பிள்ளைகள் ஆபத்தில் இருந்தால் பெற்றோர்கள் அவர்களை பாதுகாக்கவும் இது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்ற கப்பல் பறிமுதல்: ஏவுகணை இரசாயனங்கள் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்.. நோயாளிக்கு சிகிச்சை அளித்த பாதுகாப்பு காவலர்..
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..