அட்டகாசமான அம்சங்கள்.. பட்ஜெட் விலை.. இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி!

Tecno Pop X 5G Smartphone Introduced In India | டெக்னோ நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அட்டகாசமான அம்சங்கள்.. பட்ஜெட் விலை.. இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி!

டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி

Published: 

20 Apr 2026 22:05 PM

 IST

டெக்னோ (Tecno) நிறுவனம் தனது டென்கோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை (Tecno Pop X 5G Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகமான டெக்னோ ஸ்பார்க் 50 ஸ்மார்ட்போனின் (Tecno Spark 50 Smartphone) மாடலை போலவே இருக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்

இந்த டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் HD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பிரைட்னஸ் சுமார் 560 நிட்ஸ் வரை இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி LPDDR4x RAM மற்றும் 128ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : தடையில்லாம ஐபிஎல் பார்க்கணுமா? ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோவின் ரூ.149 பிளான்

டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி – கேமரா மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்

புகைப்படம் எடுப்பதற்காக இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6,500 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போனில் ஆதார் செயலி Pre Install.. முடிவில் இருந்து பின்வாங்கிய அரசு.. காரணம் என்ன?

விலை மற்றும் இதர அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் மாடலான 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.15,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.17,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் களமிறங்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 24, 2026 முதல் அமேசானில் விற்பனைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..