ஒரு நிமிடத்தில் 1 லட்சம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
Train Ticket Booking | ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அது குறித்து பதில் அளித்துள்ள ரயில்வே துறை அமைச்சர் 1 நிமிடத்தில் சுமார் 1 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் அம்சம் விரைவில் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார்.

இந்திய ரயில்வேயில் (Indian Railway) பயணிகள் ஒரு நிமிடத்தில் சுமார் 25,000 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ள நிலையில், விரைவில் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் அளவுக்கு மேம்படுத்த உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் (Union Minister Railways Ashwini Vaishnav) தெரிவித்துள்ளார். ரயில் பயணிகளுக்கான முன்பதிவு முறையை மேம்படுத்துவது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ள அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்து அமைச்சர் கூறியுள்ளது என்ன என விரிவாக பார்க்கலாம்.
ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்து முக்கிய தகவல் சொன்ன அமைச்சர்
இந்தியாவை பொருத்தவரை ஏராளமான பொதுமக்கள் ரயில் போக்குவரத்தை பெரிதும் பயன்படுத்துகின்றனர். காரணம் ரயில்களில் குறைந்த விலையில் மிக நீண்ட தூரம் பயணிக்கலாம் என்பதால் பெரும்பாலான மக்களின் முன்னணி தேர்வாக இது உள்ளது. இவ்வாறு பலரும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதால் அதில் சில சிக்கல்களும் நீடிக்கின்றன. இந்த நிலையில் , ரயில் பயணிகளுக்கான முன்பதிவு முறையை மேம்படுத்துவது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவில் ரூ.90,000 கோடியாக உயர்ந்த தினசரி யுபிஐ பரிவர்த்தனை அளவு.. ஆய்வு கூறுவது என்ன?




ஒரு நிமிடத்தில் 25,000 பேர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
அதில் அமைச்சர் கூறியுள்ளதாவது, டிக்கெட் எடுக்கும் முறையை முழுமையாக மேம்படுத்தும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது. அதன்படி, வழக்கத்தை விட தற்போது 4 மடங்கு ரயில் டிக்கெட் முன்பதிவிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார். அதாவது, பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS – Passengers Reservation System) மூலம் நிமிடத்திற்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதை மேலும் அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப பணிகள் முழுமையாக பெறும் பட்சத்தில் நிமிடத்துக்கு சுமார் 1 லட்சம் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யபடலாம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Smart Ring : ஸ்மார்ட் வாட்ச் போலவே அறிமுகமான ஸ்மார்ட் ரிங்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
மேலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரயில் ஒன் செயலியை பயன்படுத்தி பயணிகள் முன்பதிவு மற்றும் சாதாரண டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.