Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியாவில் மீண்டும் செயல்படும் டிக்டாக் இணையதளம்? மத்திய அரசு விளக்கம்

TikTok Ban Update: இந்தியாவில் மீண்டும் டிக்டாக் இணையதளம் செயல்படத் தொடங்கியுள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இணையதளம் செயல்படும் நிலையில் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலி கிடைக்கவில்லை எனவும் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் செயல்படும் டிக்டாக் இணையதளம்? மத்திய அரசு விளக்கம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Aug 2025 18:30 PM

தற்போது இன்ஸ்டாகிராம் (Instagram) ரீல்ஸ் கலாச்சாரத்துக்கு முன்னோடியாக இருந்தது டிக்டாக். ஒரு காலத்தில் டிக்டாக் மூலம் பலரும் பிரபலமானார்கள். இந்த நிலையில் டிக்டாக் செயலி கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்பு, மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அபாயம் விளைவிப்பதாக கூறி டிக்டாக் உட்பட 59 சீன (China) செயலிகளை மத்திய அரசு தடை செய்திருந்தது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் டிக்டாக் போன்ற ரீல்ஸ் ஆப்சனை வழங்க, மக்கள் அங்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தத் தொடங்கினர். இந்த நிலையில் தற்போது இணைய தளம் வழியாக டிக் டாக் செயலியை பயன்படுத்த முடிவதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் மீண்டும் டிக்டாக் இயங்குவதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக டிக்டாக் இணையதளம் மூலம் பயன்படுத்த முடிவதாகவும், செயலிகள் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் மீண்டும் டிக்டாக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளன.  அதன் படி டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே இதுபோன்ற செயலிகள் அனைத்தும் தவறானது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்லது.

இதையும் படிக்க : கூகுளில் தொலைபேசி எண்களை தேடுகிறீர்களா ? மோசடியில் சிக்கும் ஆபத்து

டிக்‌டாக் தடைக்கான பின்னணி

கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக் பகுதியில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவம் காரணமாக இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு மோசமடைந்தது. இதனையடுத்து டிக்டாக், யுசி புரௌசர், விசாட் போன்ற 59 சீன செயலிகளை மத்திய அரசு இந்தியாவில் தடை செய்தது. இந்த செயலிகள் இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்குக்கு அபாயம் விளைவிப்பாதக உள்ளது என காரணம் கூறப்பட்டது.

குறிப்பாக சீனாவின் இந்த 59 செயலிகள் பயனர்களின் தகவல்களை கசியவிடுவதாக புகார்களை சந்தித்தன. குறிப்பாக லோகேஷன் தகவல்கள், டேட்டாக்களை சீனாவில் உள்ள சர்வர்களுக்கு அனுப்புதல், மேலும் சில பியூட்டி ஆப்ஸ் மற்றும் செல்ஃபி கேமரா செயலிகளில் ஆபாச கண்டென்ட்கள் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதையும் படிக்க : இந்தியாவில் ரூ.90,000 கோடியாக உயர்ந்த தினசரி யுபிஐ பரிவர்த்தனை அளவு.. ஆய்வு கூறுவது என்ன?

இந்தியாவில் தடைவிதிக்கும் முன்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு கிட்டத்தட்ட 200 மில்லியன் பயனர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்டாக் போன்ற செயலிகள் மக்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு கருவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.