இன்ஸ்டாகிராமை தொடர்ந்து யூடியூபிலும் பிரதமர் மோடி சாதனை.. 30 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டு அசத்தல்!
PM Narendra Modi Crossed 30 Million Subscribers In YouTube | இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் சுமார் 30 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது அவரது யூடியூப் சேனலை சுமார் 30 கோடி மக்கள் பின்தொடர்கின்றனர்.

மாதிரி புகைப்படம்
சென்னை, மார்ச் 03 : இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Indian Prime Minister Narendra Modi) அதிகாரப்பூர்வ யூடியூப் (YouTube) சேனல் சுமான் 30 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட முதல் மற்றும் ஒரே தலைவராக பிரதமர் மோடி மாறியுள்ளார். இந்த நிலையில், யூடியூப் தளத்தில் பிரதமர் மோடியின் சேனல் படைத்துள்ள புதிய சாதனை குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதிய சாதனை படைத்த பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். கருத்துக்களை பகிர்வது, நாட்டு மக்கள் மற்றும் தலைவர்களுக்கு வாழ்த்து கூறுவது, நாட்டு மக்களுக்கு செய்தி கூறுவது உள்ளிட்டவற்றை அவர் சமூக ஊடகங்கள் மூலம் செய்து வருகிறார். அந்த வகையில், அவரது யூடியூப் கணக்கின் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் 30 மில்லியனை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது அவரது யூடியூப் சேனலை சுமார் 30 கோடி மக்கள் பின்தொடர்கின்றனர்.
இதையும் படிங்க : இனி வாட்ஸ்அப்பில் புரமோடட் சேனல்கள், ஸ்டேட்டஸில் விளம்பரங்கள் தோன்றும்.. மெட்டா முக்கிய அறிவிப்பு!
டிரம்பை விட 7 மடங்கு அதிக பின்தொடர்பவர்களை கொண்டுள்ள பிரதமர்
உலக அளவில் இந்த அளவிலான அதிக பின்தொடர்பவர்களை கொண்ட முதல் மற்றும் ஒரே அரசியல் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பல உலக தலைவர்களை விடவும் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். உதாரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விடவும் சுமார் 7 மடங்கு அதிக பின்தொடர்பவர்களை பிரதமர் மோடி கொண்டுள்ளார். பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சோனாரோவை விடவும் 4 மடங்கு அதிக பின்தொடர்பவர்களை பிரமர் மோடி கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் சிறுவர்கள் தற்கொலை குறித்து தேடினால் பெற்றோருக்கு எச்சரிக்கை வரும்.. மெட்டா அறிமுகம் செய்யும் முக்கிய அம்சம்!
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தான் இன்ஸ்டாகிராம் தளத்தில் சுமார் 100 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டு பிரதமர் மோடி புதிய சாதனை படைத்தார். இந்த நிலையில், தற்போது யூடியூபில் சுமார் 30 மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்டு மேலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.