WhatsApp : வாட்ஸ்அப்பில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் புதிய அம்சங்கள்.. என்ன என்ன தெரியுமா?

New Features in WhatsApp | ஏற்கனவே இருக்கும் பயனர்களை தக்க வைக்கவும், புதிய பயனர்களை ஈர்க்கும் வகையிலும் வாட்ஸ்அப் செயலியில் மெட்டா பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வீடியோ நோட்ஸ் உள்ளிட்ட பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp : வாட்ஸ்அப்பில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் புதிய அம்சங்கள்.. என்ன என்ன தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

12 Oct 2025 22:59 PM

 IST

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக பல்வேறு செயலிகள் அறிமுகமானாலும், வாட்ஸ்அப்பின் இடத்தை இதுவரை எந்த செயலியும் பறித்ததில்லை. ஆனால், சமீபத்தில் சோஹோ (Zoho) நிறுவனம் அறிமுகம் செய்த அரட்டை (Arattai) செயலி, வாட்ஸ்அப்பை முந்தியுள்ளது. இதன் காரணமாக வாட்ஸ்அப் செயலியை அரட்டை தோற்கடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், தான் வாட்ஸ்அப் செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது.

மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலிக்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் உள்ளனர். தகவல் பரிமாற்றம், புகைப்படங்கள், வீடியோ பரிமாற்றம், ஆடியோ கால் மற்றும் வீடியோ கால் என பல அசத்தல் அம்சங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள நிலையில், பலரும் இந்த செயலியை மிகவும் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப்பில் ஏற்கனவே பல சிறப்பு அம்சங்கள் உள்ள நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அந்த நிறுவனம் மேலும் மேலும் பல அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பை போலவே திரட்ஸிலும் வந்தது Community.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

புதிய அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்

  • ஆண்ட்ராய்டு பயனர்கள் மோஷன் புகைப்படங்களை (Motion Photos) வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் சாட் செய்யும்போது பகிரும் புதிய வசதி மிக விரைவில் வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • ஐஓஎஸ் பயனர்கள் லைவ் புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிரும் வசதியும் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • வாட்ஸ்அப்பில் நண்பர்களுடன் பேசும்போது, சாட் செய்யும் செய்தியை மொழிப்பெயர்ப்பு செய்யும் வசதியும் வரவுள்ளது.
  • குரூப் சாட்டில் ஒருவருடைய குறுஞ்செய்திக்கு வீடியோ நோட்ஸ் (Video Notes) மூலம் பதில் அளிக்கும் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • திரெட்டட் ரிப்ளைஸ் (Threaded Replies) அம்சமும் வாட்ஸ்அப் செயலியில் அமலுக்கு வர உள்ளது.

இதையும் படிங்க : 5ஜி நெட்வொர்க்கால் உங்க போன் பேட்டரிக்கு ஆபத்தா? உண்மை என்ன?

மேற்குறிப்பிட்ட இந்த புதிய அம்சங்கள் விரைவில் வாட்ஸ்அப்பில் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.