ஒரே விநாடியில் நெட்ப்ளிக்ஸ் முழுவதையும் டவுன்லோடு செய்யலாம் – ஜப்பானின் அதிவேக இண்டர்நெட்!

World’s Fastest Internet : ஜப்பான், உலகின் மிகவேகமான இன்டர்நெட் கொண்ட நாடு என்ற சாதனையை புரிந்துள்ளது. ஒரு விநாடியில் 1.02 பெட்டாபிட்ஸ் வேகத்தில் டேட்டாவை அனுப்பும் திறன் கொண்ட இந்த இன்டர்நெட் மூலம், நெட்ஃபிளிக்ஸ் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ஒரே விநாடியில் டவுன்லோடு செய்ய முடியும். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஒரே விநாடியில் நெட்ப்ளிக்ஸ் முழுவதையும் டவுன்லோடு செய்யலாம் - ஜப்பானின் அதிவேக இண்டர்நெட்!

மாதிரி புகைப்படம்

Published: 

12 Jul 2025 19:21 PM

உலகின் மிகவேகமான ரயில்வே, சக்திவாய்ந்த விமான நிலையங்கள் (Airport), நிலநடுக்கம் எதிர்ப்புத் திறனுள்ள கட்டிடங்கள் என்ற வரிசையில் இப்போது அதிவேகமான இன்டர்நெட் (Internet) வசதியும் ஜப்பானில் (Japan) இணைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தற்போது உலகின் மிக வேகமான இண்டர்நெட்டை கொண்ட நாடாக மாறியுள்ளது ஜப்பானின் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி (National Institute of Information and Communications Technology) மற்றும் சுமிடோமோ எலக்ட்ரிக் (Sumitomo Electric) இணைந்து இந்த சாதனையை பெற்றுள்ளனர். அவர்கள் உருவாக்கிய புதிய நெட்வொர்க் சிஸ்டம், ஒரு விநாடிக்கு 1.02 பெட்டாபிட்ஸ் (Petabits) வேகத்தில் டேட்டாவை அனுப்புகிறது. இதனை எளிமையாக புரியும்படி சொல்வதென்றால், நெட்ஃபிளிக்ஸில் உள்ள படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை 1  நொடியில் டவுன்லோடு செய்ய முடியும்.

இந்தியாவின் இண்டர்நெட் வேகம்

இந்தியாவின் சராசரி இண்டர்நெட் வேகம் 63.55 எம்பிபிஎஸ் ஆக உள்ளது. ஜப்பானின் இண்டர்நெட் வேகத்தை ஒப்பிடும்போது அது இந்தியாவை விட 1.6 கோடி மடங்கு அதிகம். மேலும் அமெரிக்காவை விட 35 லட்சம் மடங்கு அதிகம். இதன் மூலம் ஜப்பான் அதிவேக இண்டர்நெட் கொண்ட நாடாக இருந்து வருகிறது.  ஜப்பானின் இண்ட்ர்நெட் வேகத்தில் ஆங்கில விக்கிபீடியா முழுவதையும் 10,000 முறை ஒரு விநாடியில் டவுன்லோட் செய்யலாம். மேலும் இது 8கே வீடியோவையும் ஒரு விநாடியில் டவுன்லோடு செய்ய முடியும். மேலும் 100 ஜிபி அளவு டேட்டாக்களை நொடியில் டவுன்லோடு செய்யும் திறன் கொண்டது.

இதையும் படிக்க: இரவு முழுக்க போனை சார்ஜில் வைத்திருக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!

இந்த சாதனையின் பின்னணி

  • இந்த அதிவேக இண்டர்நெட் இணைப்பு மூலம், 19 கோடிகொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த ஆப்டிகல் ஃபைபர் கேபிள் மூலம் செயல்படுகிறது.

  • ஒட்டுமொத்தமாக 1,808 கிமீ தூரம் வரை தரவுகளை இடையறாத வேகத்தில் அனுப்ப முடிகிறது.

  • இந்த கேபிள் வெறும் 0.125 மில்லி மீட்டர் தடிமன் மட்டுமே கொண்டது. இன்று நாம் பயன்படுத்தும் கேபிள்களுடன் சம அளவிலேயே உள்ளது. அதாவது, இன்று நாம் பயன்படுத்தும் கேபிள்களை பயன்படுத்தியே இந்த வேகத்தை அடைய முடியும் என்பது புரிகிறது.

இதையும் படிக்க: உங்க வைஃபை பிரச்னையா? இண்டர்நெட் ஸ்லோவாக இருக்கிறதா? எப்படி சரி செய்வது?

ஜப்பானின் இந்த சாதனை உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த டெக்னாலஜி ஒருநாளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமானால், இணையத்தின் எல்லைகளை முற்றிலும் மாற்றும். மேலும் வேலை, கல்வி, மருத்துவம், மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து துறைகளிலும் புரட்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் இது விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.