Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : வாட்ஸ்அப்பில் Reminder செட் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

How To Set Reminder In WhatsApp | வாட்ஸ்அப் ஒரு தகவல் பரிமாற்ற செயலி மட்டுமன்றி, அதில் பல அசத்தல் அம்சங்களும் உள்ளன. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் ரிமைண்டர் செட் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Dec 2025 19:39 PM IST
மனிதர்கள் வேலை, குடும்பம் என தங்களது அன்றாட வாழ்வில் மிகவும் பரபரப்பாக இயங்கிகொண்டு இருக்கின்றனர். இந்த சூழலில் அவர்களால் ஏதேனும் நிகழ்வுகள் அல்லது சந்திப்புகள் இருந்தால் அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில், யாரேனும் முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால் சிறப்பானதாக இருக்கும் என் தோன்றும். 

1 / 5
இந்த சிக்கலை சரி செய்ய தான் மெட்டா (Meta) நிறுவனம் ஆப்பிள் (Apple) பயனர்களுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) செயலில் நிகழ்வுகளை நினைவுப்படுத்துவதற்கான நினைவூட்டும் (Reminder) அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதனை பயன்படுத்தி நிகழ்வுகள் மறக்காத வண்ணம் செட் செய்துக்கொள்ளலாம்.

2 / 5
அதற்கு முதலில் வாட்ஸ்அப் செயலிக்குள் செல்ல வேண்டும். அதில் யாருடைய குறுஞ்செய்தியில் உங்களக்கு நினைவுப்படுத்த வேண்டிய நிகழ்வு உள்ளதோ அவரது சாட்டை திறக்க வேண்டும். அதில் அந்த நிகழ்வுக்கான அழைப்பு அல்லது அது தொடர்பாக அனுப்பட்ட குறுஞ்செய்தியை லாங்க் பிரஸ் (Long Press) செய்ய வேண்டும். 

Whatsapp Reminder (2)

3 / 5
குறுஞ்செய்தியை லாங் பிரஸ் செய்யும் பட்சத்தில் அதில் சில ஆப்ஷன்கள் தோன்றும். அதில் அடிஷனல் ஆப்ஷன்ஸ் (Additional Options) என்ற அம்சத்தை கிளிக் செய்து, ரிமைண்ட் மி (Remind Me) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு எந்தனை மணி நேரத்திற்கு பிறகு நினைவூட்ட வேண்டும் என சில ஆப்ஷன்கள் தோன்றும்.

Whatsapp Reminder (3)

4 / 5
உதாரணமாக 2 மணி நேரம், 8 மணி நேரம், 24 மணி நேரம் என தோன்றும். இதுதவிர நேரத்தை நாமே தேர்வு செய்துக்கொள்ளும் ஆப்ஷனும் அதில் கொடுக்கப்பட்டு இருக்கும். சரியான நேரத்தை தேர்வு செய்து பிறகு அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பெல் சிம்பிளை கிளிக் செய்ய வேண்டும். ரிமைண்டர் செட் செய்யப்பட்டுவிட்டது என்றால் அதற்காக உங்களுக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி வரும்.  

Whatsapp Reminder (4)

5 / 5