ஆண்ட்ராய்டு போன்களை தாக்கும் புதிய வைரஸ் – மத்திய அரசு எச்சரிக்கை – தவிர்ப்பது எப்படி?

Government Warns Android Users : இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சைபர் ஆபத்து குறித்து மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் வழக்கமான செயலிகள் போலவே தோற்றம் கொண்ட புதிய மால்வேர் உருவாகியிருப்பதாகவும் அது நம் தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களை தாக்கும் புதிய வைரஸ்  - மத்திய அரசு எச்சரிக்கை - தவிர்ப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Updated On: 

22 Apr 2026 20:59 PM

 IST

இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சைபர் ஆபத்து குறித்து மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கமான செயலி போல தோன்றும் இந்த மால்வேர் ஒருமுறை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டால் ஓடிபி, பாஸ்வேர்டு வங்கி விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களை திருடுவதுடன், உங்கள் ஸ்மார்ட்போனை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் திறனும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எச்சரிக்கைபதிவையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

புதிய ஆண்ட்ராய்டு வைரஸ் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் புதிய மால்வேர் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியாது. இது வங்கி செயலி, கஸ்டமர் கேர் செயலிகள், மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகள் போன்ற வடிவில் தோன்றக் கூடும். மக்கள் தெரியாமல் அதனை தங்கள் போனில் இன்ஸ்டால் செய்தால் அது பின்னணியில் இயங்கி மொபைலில் உள்ள தகவல்களை எடுத்துக்கொள்ளும்.

இதையும் படிக்க : உங்கள் போனை வேறு யாரும் கண்காணிக்கிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?

மத்திய அரசு எச்சரிக்கை

 

குறிப்பாக நம் வங்கி லாகின் விவரங்கள், ஓடிபி மெசேஜ்கள், டெபிட், கிரெடிட் கார்டுகள், பாஸ்வேர்டு மற்றும் பின, தனிப்பட்ட மெசேஜ், கால் லாக் போன் விவரங்களை சேகரிக்கும். இதன் மூலம் மோசடி குழுக்கள் நம் வங்கி கணக்குகளை காலி செய்யும் ஆபத்து உள்ளது. மேலும், அடையாள திருட்டு போன்று நம் விவரங்களை வைத்து ஏமாற்றவும் முடியும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்த வைரஸ் பொ72320துவாக ஏபிகே ஃபைல்கள் மூலம் நம் இயங்கத் தொடங்கும். மேலும் வாட்ஸ்அப், எஸ்எம்எஸ், டெலிகிராம் லிங்க்குள் அல்லது போலியான கஸ்டமர் கேர் அழைப்புகள், அல்லது சந்தேகத்துக்குரிய இணையதளங்கள் மூலம் பயனர்களை ஏமாற்றி இன்ஸ்டால் செய்ய வைக்கப்படுகிறது. அதன் பின் நாம் பெர்மிசன் கொடுத்த பிறகு உங்கள் போன் முழுவதும் மால்வேர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும்.

இதையும் படிக்க : ஸ்மார்ட்போனில் ஆதார் செயலி Pre Install.. முடிவில் இருந்து பின்வாங்கிய அரசு.. காரணம் என்ன?

தவிர்ப்பது எப்படி?

  • கூகுள் பிளே ஸ்டோர் போன்ற நம்பகமான தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • தெரியாத லிங்க்குகள் மற்றும் மெசேஜ்களில் வரும் ஏபிகே ஃபைல்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • எந்தவொரு செயலிக்கும் ஆப் பெர்மிசன் கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பயன்பாடுகளுக்கு பெர்மிசன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் இன்ஸ்டால் செய்யாத ஆப்கள் இருந்தால் உடனே டெலிட் செய்ய வேண்டும்.
  • உங்கள் போனை அடிக்கடி சாஃப்ட்வேர் அப்டேட் செய்வது நல்லது.
Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..