Google Maps : கூகுள் மேப்ஸ்-ல் வரும் முக்கிய அம்சம்.. இனி இதற்கு கவலை இல்லை!
Google Maps Battery Saver Coming Soon | ஏராளமான பொதுமக்கள் கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்துகின்றனர். ஆனால், தற்போது கூகுள் மேப்ஸ் செயலிக்கு போட்டியாக பல செயலிகள் களமிறங்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தான் கூகுள் மேப்ஸ் செயலியில் முக்கிய அம்சம் ஒன்று அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் கூகுள் (Google) நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை பயன்படுத்துகின்றனர். தெரியாத ஒரு இடத்திற்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் கூகுள் மேப்ஸை தான் நம்பியுள்ளனர். இவ்வாறு பொதுமக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் அம்சமாக கூகுள் மேம்ப்ஸ் மாறிவிட்டது. இவ்வாறு உலக அளவில் ஏராளமான மக்கள் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தும் நிலையில், அது தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூகுள் மேப்ஸ்ல் வரப்போகும் முக்கிய அம்சம்
திருமண நிகழ்ச்சிகள், கடைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடு இப்படி தெரியாத இடங்களுக்கு பயணம் செய்யும் பெரும்பாலான பொதுமக்கள் கூகுள் மேப்ஸ் செயலியை நம்பிதான் பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் முழுவதும் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தும்போது ஸ்மார்ட்போனின் பேட்டரி குறைந்து சுவிட் ஆஃப் (Switched Off) ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவ்வாறு மொபைல் போன் சுவிட் ஆஃப் ஆகும் பட்சத்தில் அவசர தேவைக்கு கூட யாரையும் தொடர்புக்கொள்ள முடியாமல் போய்விடும். இந்த நிலையில் தான், கூகுள் நிறுவனம் அதில் ஒரு முக்கிய மற்று பயனுள்ள அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : இனி ஆப்பிள் வாட்சிலும் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்.. மெட்டா அசத்தல் அறிவிப்பு!
இனி கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும்போது சார்ஜ் விரைவில் குறையாது
அதாவது கூகுள் நிறுவனம், கூகுள் மேப்ஸ் செயலியில் பவர் சேவிங் மோடை (Power Saving) சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகமாக உள்ள இந்த புதிய அம்சத்தின் மூலம், செயலியில் காட்டப்படும் விஷுவல் தவல்கள் கிராஃபிக் குவாலிட்டியாக குறைக்கப்படும் என கூறப்பட்டுகிறது. சார்ஜ் செய்துக்கொண்டே கூகுள் மேப்ஸ் பயன்படுத்தினால் இதற்கான தேவையே ஏற்படாது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொபைல் போனை சார்ஜ் செய்வதற்கான நேரம் குறைவாக உள்ளவர்கள் மற்றும் சார்ஜர் இல்லாமல் பயணம் செய்யும் நபர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மொபைல் சார்ஜரில் ஏன் இரண்டு பின்கள் மட்டுமே உள்ளன?.. உங்களுக்கு தெரியுமா?
தற்போது கூகுள் மேப்ஸ் செயலிக்கு எதிராக மேப்பிள்ஸ் நிறுவனத்தின் மேப் மை இந்தியா (Map My India) உள்ளிட்ட செயலிகள் களமிறங்கியுள்ள நிலையில், கூகுள் மேப்ஸ் செயலியின் இந்த அம்சம் அறிமுமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.