ஜெமினி இணைப்பு முதல் ஸ்மார்ட் தேடல் வரை… கூகுள் குரோமில் 10 புதிய ஏஐ வசதிகள்

Chrome Upgrade: உலகின் மிக அதிகம் பயன்படுத்தப்படும்  இண்டர்நெட் புரௌசர்களில் ஒன்றான கூகுள் குரோம் (Google Chrome) தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய அப்டேட்டை அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டில் 10 புதிய ஏஐ அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஜெமினி இணைப்பு முதல் ஸ்மார்ட் தேடல் வரை... கூகுள் குரோமில் 10 புதிய ஏஐ வசதிகள்

மாதிரி புகைப்படம்

Published: 

20 Sep 2025 21:46 PM

 IST

உலகின் மிக அதிகம் பயன்படுத்தப்படும்  இண்டர்நெட் புரௌசர்களில் ஒன்றான கூகுள் குரோம் (Google Chrome) தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய அப்டேட்டை அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டில் 10 புதிய ஏஐ அப்டேட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் ஜெமினி ஏஐ இணைப்பு,  ஆம்னிபாக்ஸ் ஏஐ மோட்(Omnibox AI Mode), Recall கருவி, மேலும் மேம்பட்ட ஆன்லைன் பாதுகாப்பு உள்ளிட்ட பல வசதிகள் அடங்குகின்றன. முதற்கட்டமாக, இந்த அப்டேட் அமெரிக்காவில் அறிமுகமாகிறது. பின்னர், உலகின் பிற நாடுகள் மற்றும் பல மொழிகளில் படிப்படியாக விரிவாக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

குரோமில் ஜெமினி ஏஐ

குரோம் புரௌசரில் தற்போது ஜெமினி ஏஐ கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது.  அதுகுறித்து பார்க்கலாம்.

  • எந்த ஒரு இணைய பக்கத்தையும் சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம்.
  • ஒரே நேரத்தில் பல டேப்களை ஆய்வு செய்யலாம்.
  • மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோருக்கு ஆராய்ச்சியில் உதவி செய்யும்.
  • நானோ பனானா போன்ற படங்களை உருவாக்க முடியும்.

அடுத்த சில வாரங்களில் இந்த ஜெமினி ஏஐ வசதிகள் யூடியுப், காலண்டர், மேப்ஸ் போன்ற கூகுளின் பிற சேவைகளுடன் இணைக்கப்படும். இதன் மூலம் ஒரே இடத்தில் பல வேலைகள செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  :  ஒரு ரூபாய் கூட இல்லாமல் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் பண்ணலாம்.. ஜெமினி ஏஐ போதும்!

ஸ்மார்ட் புரௌசிங்

ஜெமினியின் புதிய ஏஜெண்டிக் திறன்கள் மூலம் பயனர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதாவது நம் அன்றாட வேலைகளை மிகவும் எளிதாக்கும். உங்களுக்கு ஒரு மருத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்ய வேண்டும் என்றால், ஏஐ புக் செய்து கொடுக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து கொடுக்கும் ஆன்லைன் பணிகளை எளிதாக முடிக்க உதவும். ஆனால் அதன் கண்டரோல் முழுவதும் பயனர்களின் கைகளில் தான் இருக்கும். எந்த நேரத்திலும் ஏஐ செயல்பாட்டை நிறுத்திவிடலாம் என கூகுள் உறுதியளித்திருக்கிறது.

குரோமின் அட்ரஸ் பாரில் ஏஐ மோட்

குரோமின் அட்ரஸ் பாரில் இப்போது கூடுதலாக ஏஐ சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு சிக்கலான கேள்விகளையும் ஒரே ஒருமுறை டைப் செய்தால் நமக்கு விளக்கமளிக்கும். மேலும் சூழல் சார்ந்த விளக்கங்களை பக்கங்களோடு நமக்கு விளக்கும். மேலும் புதிய ரீகால் வசதி பயனுள்ளதாக இருக்கும். உதரணமாக நீங்கள் கடந்த வாரம் பார்த்த ஒரு இணைய பக்கம் குறித்து கேட்டால் அதற்கான லிங்க்கை குரோம் உங்களுக்கு அளிக்கும்.

இதையும் படிக்க : கண்டென்ட் கொடுத்தால் போதும்… இனி இலவசமாக வீடியோ உருவாக்கலாம் – கூகுள் விட்ஸ் அறிவிப்பு

பாதுகாப்பான ஆன்லைன் அனுபவம்

  • பாதுகாப்பு அம்சங்களிலும் மிகப்பெரிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
  • ஜெமினி நானோ மூலம் பாதுகாப்பாக புரௌசிங் இன்னும் வலுத்தப்படுகிறது.
  • போலியான வைரஸ் எச்சரிக்கைகள்  அல்லது பரிசு வென்றிருக்கிறீர்கள் போன்ற மோசடி அலெர்ட்கள் தடுக்கப்படும்.
  • தேவையற்ற ஸ்பேம் நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் சைட் அனுமதி கோரிக்கைகள் ஏஐ மூலம் ஃபில்டர் செய்யப்பட்டு நீக்கப்படும்.