ஒரு ரூபாய் கூட இல்லாமல் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் பண்ணலாம்.. ஜெமினி ஏஐ போதும்!

Pre Wedding Photos with Gemini AI | சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஏஐ ஆகியவற்றை பயன்படுத்தி பலரும் பல விதமாக புகைப்படங்களை எடிட் செய்கின்றனர். அந்த வகையில் ஜெமினி ஏஐ-ஐ பயன்படுத்தி ப்ரீ வெட்டிங் புகைப்படங்களை எடிட் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

ஒரு ரூபாய் கூட இல்லாமல் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் பண்ணலாம்.. ஜெமினி ஏஐ போதும்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

17 Sep 2025 19:20 PM

 IST

தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியாக உள்ள செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் மூலம் தற்போது அனைத்துமே சாத்தியமாகிறது. இந்த அசாத்திய அம்சத்தை பயன்படுத்தி பலரும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தங்களது புகைப்படங்களை எடிட் செய்துக்கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களில் மட்டும் பல வகையாக செயற்கை நுண்ணறிவு அம்சங்களில் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக நானோ பனான டிரெண்ட் (Nano Banana Trend), ரெட்ரோ சாரி டிரெண்ட் (Retro Saree Trend) என வரிசையாக வந்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தி ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் போல புகைப்படங்களை எடிட் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ப்ரீ வெட்டிங் போட்டோஷுட் போல புகைப்படங்களை எடிட் செய்ய இத பண்ணுங்க

பலரும் அதிக பணம் செலவு செய்து தங்களது ப்ரீ வெட்டிங் புகைப்படங்களை எடுப்பர். ஆனால், ஜெமினி ஏஐ மூலம்  மிக சுலபமாக அழகிய ப்ரீ வெட்டிங் புகைப்படங்களை உருவாக்கலாம். அதற்கு கீழே கொடுக்கப்படும் இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்.

சூழலை முடிவு செய்யுங்கள்

நீங்கள் ப்ரீ வெட்டிங் புகைப்படங்களை எடிட் செய்வதற்கு முன்னதாக எந்த தீமில் புகைப்படங்களை எடுக்க விரும்புகிறீர்கள் எனபதை முடிவு செய்யுங்கள்.

இதையும் படிங்க : Snapchat : பயனர்கள் பல நாட்களாக எதிர்ப்பார்த்து காத்திருந்த அம்சத்தை அறிமுகம் செய்தது Snapchat.. என்ன தெரியுமா?

உணர்வு

ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கும். எனவே நீங்கள் ப்ரீ வெட்டிங் புகைப்படத்தை எடிட் செய்வதற்கு முன்னதாக எந்த உணர்வில் எடிட் செய்ய போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். உதாரணமாக சிறிப்பு, விளையாட்டு, காதல், காமம் என உங்களுக்கு விருப்பமான உணர்வுகளை தேர்வு செய்யுங்கள்.

போஸ்

அந்த புகைப்படத்தில் என்ன போஸ் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். உதாரணமாக இருவரும் கை கோர்த்துக்கொண்டு செல்வது, தோல் மீது சாய்துக்கொண்டு இருப்பது ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இதையும் படிங்க : இன்ஸ்டாவை கலக்கும் Retro Saree AI டிரெண்ட்.. பாதுகாப்பானதா?.. எச்சரிக்கும் வல்லுநர்கள்!

உடைகள்

ப்ரீ வெட்டிங் புகைப்படங்களை உருவாக்குவதற்கு முன்னதாக என்ன மாதிரியாக உடை அணிந்திருக்க வேண்டும், அந்த உடை என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்து அதனை தெளிவாக பதிவிட வேண்டும்.

பொருட்கள்

புகைப்படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் ஏதேனும் பொருட்களை சேர்க்க வேண்டும் என்றால் அது குறித்து தெளிவாக பதிவிட வேண்டும்.

நமக்கு என்ன தேவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் பட்சத்தில், மிக அழகிய புகைப்படங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.