இயர் பட்ஸ்களை இப்படி சுத்தம் செய்யுங்கள்.. பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்!

Clean Earbuds Safely | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் இயர் பட்ஸ்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் அவற்றை முறையாக சுத்தம் செய்வதில்லை. அதனால் பல பிரச்னைகள் உருவாக உள்ளது. இந்த நிலையில், இயர் பட்ஸ்களை சுத்தம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

இயர் பட்ஸ்களை இப்படி சுத்தம் செய்யுங்கள்.. பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்!

மாதிரி புகைப்படங்களை

Updated On: 

27 Sep 2025 13:24 PM

 IST

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் இயர்போன் (Earphone), இயர் பட்ஸ் (Ear Buds) ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். திரைப்படம் பார்ப்பது, பாடல்கள் கேட்பது என பலவற்றுக்கும் பெரும்பாலானவர்கள் அவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால், பெரும்பாலானவர்கள் மிகப்பெரிய தவறு ஒன்று உள்ளது. அதுதான் இயர் பட்ஸ்களை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது. அவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் காதில் பூஞ்சை தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இயர் பட்ஸ்களை அவ்வப்போது சுத்தம் செய்வது பாதுகாப்பாக இருக்க உதவி செய்யும். இந்த நிலையில், இயர் பட்ஸ்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாமல் அவற்றை சுத்தம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இயர் பட்ஸ்களை பாதுகாப்பாக சுத்தம் செய்வது எப்படி?

இயர் பட்ஸ்களை பாதுகாப்பாக சுத்தம் செய்ய சில வழிகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காது அழுக்கை இயர் பட்ஸில் இருந்து சுத்தம் செய்யுங்கள்

காதில் இருந்து வெளியேறும் அழுக்குகள் இயர் பட்ஸில் தங்கிவிடும். இதன் காரணமாக இயர் பட்ஸில் இருந்து மிக குறைந்த சத்தம் கேட்கும். இந்த நிலையில், நல்ல உளர்ந்த பிரஷை கொண்டு இயர் பட்ஸில் ஒட்டிக்கொண்டு இருக்கும் கிருமிகளை மெதுவாக தட்டி எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : அமேசான் Vs பிளிப்கார்ட் சேல்.. ரூ.10,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!

இயர் பட்ஸின் வெளிப்புறத்தை சுத்தம் செய்யுங்கள்

அன்றாட வாழ்க்கையில் இயர் பட்ஸை அதிகம் பயன்படுத்துவதால் அதன் வெளிப்புறத்தில் அழுக்கு, தூசி, வியர்வை என எல்லாம் தங்கியிருக்கும். அவை பூஞ்சை தொற்றை உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே நன்கு உளர்ந்த துணியை கொண்டு அதனை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் அதில் இருக்கும் கிருமிகளை சுத்தம் செய்ய ஏதேனும் Disinfector-களை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க : WhatsApp : இனி வாட்ஸ்அப்பில் 19 மொழிகளில் மொழிப்பெயர்க்கலாம்.. வந்தாச்சு Instant Translation அம்சம்!

சார்ஜிங் கேசை சுத்தம் செய்ய வேண்டும்

பெரும்பாலான நபர்கள் இயர் பட்ஸ்களை அவ்வப்போது சுத்தம் செய்தாலும், அதனை சார்ஜ் போடும் சார்ஜிங் கேசை சுத்தம் செய்வதில்லை. ஆனால் அவ்வாறு செய்வது இயர் பட்ஸின் செயல்திறனை பாதிக்கக்கூடும். எனவே அவ்வப்போது சார்ஜிங் கேசையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பது அவசியமாக உள்ளது.