e Mail-ல் வரும் இந்த லிங்கை கிளிக் செய்யாதீங்க.. வருமான வரி தாக்கல் மோசடி குறித்து எச்சரிக்கும் PIB!

Income Tax Filing Scam | செப்டம்பர் 15, 2025-க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு வருமான வரி மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருவதாக PIB Fact Check தெரிவித்துள்ளது.

e Mail-ல் வரும் இந்த லிங்கை கிளிக் செய்யாதீங்க.. வருமான வரி தாக்கல் மோசடி குறித்து எச்சரிக்கும் PIB!

மாதிரி புகைப்படம்

Published: 

21 Jul 2025 12:30 PM

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துக்கொண்டே செல்லும் நிலையில், மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வங்கி கணக்கு மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மோசடி, ஷாப்பிங் மோசடி என பல வகைகளில் மோசடிக்காரர்கள் பொதுமக்களை குறிவைத்து மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் , தற்போது வருமான வரியை (Income Tax) மையப்படுத்தி புதிய விதமான மோசடிகள் நடைபெற்று வருவதாகவும், அவற்றை குறித்து பொதுமக்கள் கவணமாக இருக்க வேண்டும் என்றும் PIB Fact Check தெரிவித்துள்ளது.

வருமான வரியை மையப்படுத்தி நடைபெறும் மோசடி

ஒவ்வொரு காலக்கட்டத்தை பயன்படுத்தி அதற்கு ஏற்ப மோசடி செய்வதை மோசடி கும்பல்கள் வழக்கமாக கொண்டுள்ளன. உதாரணமாக, ஆதார் கார்டு திருத்தம் செய்ய கடைசி தேதி அறிவிக்கப்பட்டால், ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ளலாம் என பொதுமக்களுக்கு லிங்கை அனுப்பி அதன் மூலம் மோசடி வலையில் விழ வைப்பர். இவ்வாறு கால சூழலுக்கு ஏற்றவாறு மோசடிகளை அவர்கள் அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது வருமான வரி தாக்கலை மையப்படுத்தி மோசடிக்காரர்கள் தற்போது மோசடி செய்து வருகின்றனர்.

 இதையும் படிங்க : குடும்பத்தினர் பெயரில் வீடு வாங்கினால் வரிவிலக்கு கிடைக்குமா? உண்மை என்ன?

இந்தியாவில் வருமான வரி செலுத்தும் அனைவரும் செப்டம்பர் 15, 2025-க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. இந்த நிலையில், ஏராளமான பொதுமக்கள் வரி தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சூழலை பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரி தாக்கல் தொடர்பான செய்திகளை அனுப்பும் இந்த மோசடி கும்பல்கள் அதன் மூலம் மோசடி அரங்கேற்றுகின்றன.

PIB Fact Check சொன்ன முக்கிய தகவல் 

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள PIB Fact Check, வருமான வரித்துறை வெரிஃபிகேஷன் கேட்பதை போல உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை ஒருபோதும் கிளிக் செய்துவிடாதீர்கள். அவை மோசடிக்காரர்கள் உங்களுக்கு விரிக்கும் வலையாக இருக்கலாம். லிங்குகளை கிளிக் செய்வது, தனிப்பட்ட தகவல்களை பகிர்வது உள்ளிட்ட செயல்களை செய்ய வேண்டாம் என்றும் இத்தகைய மோசடி சம்பவங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.