குறைந்தபட்ச ரீச்சார்ஜ் இனி 249-க்கு கிடைக்காது.. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஏர்டெல்!
Airtel Cancels 249 Recharge Plan | இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.249-க்கு அடிப்படை ரீச்சார்ஜ் திட்டத்தை வழங்கி வந்தது. இந்த நிலையில், தற்போது அந்த அடிப்படை ரீச்சார்ஜ் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக உள்ளவை ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) உள்ளிட்ட நிறுவனங்கள். இந்த நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். அதிலும் குறிப்பாக ஜியோ தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் இந்தியாவில் அதிகமாக உள்ளனர். காரணம், ஆரம்ப காலத்தில் ஜியோ நிறுவனம் மிக குறைந்த விலையில் ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்கியது. குறிப்பாக ஒரு ஆண்டுக்கு இலவச சேவையையும் வழங்கியது. இதன் காரணமாக பலரும் ஜியோ நிறுவனத்திற்கு மாறினர். ஆனால், காலப்போக்கில் அந்த நிறுவனம் தனது ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்த தொடங்கியது.
அடிப்படை ரீச்சார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்திய ஜியோ
ஜியோ நிறுவனம் ஆரம்பகாலத்தில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில், மிக குறைவான விலையில் ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்கி வந்தது. காலப்போக்கில் அந்த நிறுவனம் தனது ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த தொடங்கியது. அதாவது ரூ.149-க்கு வழங்கப்பட்டு வந்த அடிப்படை ரீச்சார் திட்டத்தை ரத்து செய்து ரூ.249-க்கு அடிப்படை ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்தது. ஜியோவின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், தற்போது அடிப்படை ரீச்சார்ஜ் திட்டத்தில் மேலும் ஒரு மாற்றத்தை செய்துள்ளது.
இதையும் படிங்க : பட்ஜெட் விலையில், அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது லாவா பிளேஸ் AMOLED 2 5ஜி!
அதாவது ரூ.249 ஆக இருந்த தனது அடிப்படை ரீச்சார்ஜ் திட்டத்தை ரத்து செய்துள்ள ஜியோ, ரூ.299-க்கு அடிப்படை ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.300 இல்லாமல் பயனர்கள் தங்களது மாதந்திர தகவல் தொலைத்தொடர்பு சேவையை பெற முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த ரூ.299-க்கான திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச குறுஞ்செய்தி, தினமும் 1.5 ஜிபி டேட்டா உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 28 நாட்களாக உள்ளது.
ஜியோவை தொடர்ந்து அடிப்படை திட்டத்தை ரத்து செய்த ஏர்டெல்
ஜியோ நிறுவனம் தனது ரூ.249-க்கான அடிப்படை ரீச்சார் திட்டத்தை ரத்து செய்துள்ள நிலையில், அதனை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது அடிப்படை ரீச்சார்ஜ் திட்டத்தை ரத்து செய்துள்ளது. ஒரு நாளுக்கு 1 ஜிபி டேட்டா என்ற அடிப்படையில் ரூ.249-க்கு அடிப்படை ரீச்சார்ஜ் திட்டத்தை வழங்கி வந்த ஏர்டெல் தற்போது அதனை ரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஜியோவை போலவே ஏர்டெல் நிறுவனமும் ரூ.299-க்கு தனது அடிப்படை திட்டத்தை அறிமுகம் செய்யுமா என்ற அச்சம் பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், புதிய ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஏர்டெல் எதுவும் கூறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.