சென்னையில் இளைஞர் வெட்டிக் கொலை.. காதலிகளே அரங்கேற்றிய கொடூரம்.. திடுக் சம்பவம்!!
காதலி மற்றும் அவரது தோழியுடன் நெருங்கிய உறவில் இருந்து வந்த இளைஞரை அவர்கள் இருவரும் சேர்ந்து சதிதிட்டம் தீட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, இன்ஸ்டாகிராம் மூலம் பல்வேறு ஆண்களுக்கு வலை விரித்த 2 பெண்களும், பலரையும் ஏமாற்றி வந்துள்ளனர்.

சென்னையில் நடந்த கொடூரக் கொலை
சென்னை, ஜனவரி 17: சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவரை மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இளைஞருடன் காதலில் இருந்த இரண்டு பெண்கள் உடனிருந்து இந்த கொலையை அரங்கேற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்களுடனும் காதலில் இருந்த அவரை தீர்த்துக்கட்ட, காதலிகளே தங்களது ஆண் நண்பர்களை அழைத்து வந்து கொலையும் செய்துள்ளனர். அதோடு, சாதாரணமாக இல்லாமல் கொலையையும் மிகக் கொடூரமாக செய்துள்ளனர். எனினும், சம்பவ இடத்தில் இருந்து தப்பியவர்களை போலீசார் வலைவீசி பிடித்துள்ளனர். எதற்காக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: இளம்பெண்ணுக்கு மிரட்டல்.. ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலம் கைது.. திடுக் பின்னணி!!
2 பெண்களுடன் காதலில் இருந்த இளைஞர்:
சென்னை பல்லாவரம் அருகே உள்ள திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22). இவர் ஒரு கட்டுமானத் தொழிலாளி. இவரது சொந்த ஊர் திண்டிவனம். இவருக்கு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ரீனா (24) என்ற பெண்ணுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல், திரிசூலம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில், செல்வகுமாருக்கு ரீனாவின் தோழியான ரஜிதா (25) என்பவருடனும் பழக்கம் ஏற்பட்டது. அவளுடனும் அவர் அடிக்கடி தனிமையில் ரகசியமாகப் பொழுதைக் கழித்து வந்தார். இந்த விஷயம் ரீனா மற்றும் ரஜிதா ஆகிய இரு தோழிகளுக்கும் தெரியவந்தது. இதனால், தோழிகள் இருவரும் செல்வகுமாருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைத்த காதலிகள்:
இந்த நிலையில், ரஜிதா மற்றும் ரீனா ஆகிய இருவரும் ஒரு 17 வயது சிறுவனுடன் பழக்கத்தில் இருந்துள்ளனர். தொடர்ந்து, அவர்கள் மூவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். மேலும், சில ஆண்களுடன் சேர்ந்து ஒரே அறையில் மது அருந்தி கேளிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையறிந்த செல்வகுமார், தனது காதலிகளையும், அவர்களது நண்பர்களையும் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ரீனாவும் ரஜிதாவும் செல்வகுமாரை சமாதானப் பேச்சுவார்த்தைக்காக திரிசூலத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு அழைத்தனர்.
கொடூரமாக அரங்கேறிய கொலை:
அதன்படி, போதையில் இருந்த செல்வகுமார் சமாதானப் பேச்சுவார்த்தைக்காக அந்தப் பூங்காவிற்குச் சென்றார். அங்கு அவர் ரீனா மற்றும் ரஜிதாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த அந்த 17 வயது சிறுவனும் அவனது கூட்டாளியான அலெக்ஸ் என்பவனும் சேர்ந்து கத்தியால் செல்வகுமாரின் முகத்தில் சரமாரியாகக் குத்தினர். கண்கள், வாய் மற்றும் முகம் முழுவதும் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இருப்பினும், அவர்களது ஆத்திரம் அடங்காமல், அவரது பிறப்புறுப்பையும் துண்டித்தனர்.
இதனிடையே, செல்வகுமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வரவே, நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லாவரம் போலீசார், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த செல்வகுமாரை மீட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிக்க : 40 வயது மருத்துவருடன் காதல்.. அறையில் பிணமாக கிடந்த மாணவி.. தோண்ட தோண்ட வெளிவந்த பகீர் தகவல்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களுக்கு வலை:
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், செல்வகுமார் மிகவும் நெருக்கமாகப் பழகிய ரீனாவும் அவரது தோழி ரஜிதாவும் இன்ஸ்டாகிராம் மூலம் பல இளைஞர்களை மயக்கி, அவர்களிடம் இருந்து பணம் பறித்து, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதுபற்றி செல்வகுமார் அவர்களிடம் கேள்வி கேட்டபோது, இரண்டு பெண்களும் தங்கள் நண்பர்களின் உதவியுடன் அவரைக் கொலை செய்துள்ளனர். இதையடுத்து, ரீனா, ரஜிதா மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். தப்பி ஓடிய அலெக்ஸ் என்பவரைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.