அடுத்த வாரம் திருமணம்…பத்திரிகை கொடுக்க சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்..எமனாக மாறிய வேன்!

Madurai Crime : மதுரை மாவட்டத்தில் அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த புது மாப்பிள்ளை சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் மீது தனியார் வேன் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .

அடுத்த வாரம் திருமணம்...பத்திரிகை கொடுக்க சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்..எமனாக மாறிய வேன்!

சாலை விபத்தில் புது மாப்பிள்ளை பலி

Published: 

24 Jan 2026 08:57 AM

 IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது திருவள்ளுவர் நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரசன்ன வெங்கடேஷ் (26 வயது). கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இவருக்கும் இதை ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அடுத்த வாரம் பிரசன்ன வெங்கடேசுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக, பிரசன்ன வெங்கடேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் விடுமுறை எடுத்து விட்டு எனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது, அவர் பல்வேறு இடங்களுக்கு தனது திருமணத்திற்கான பத்திரிகைகளை உறவினர்களிடம் கொடுத்து வந்தார். அதன்படி, சம்பவத்தன்று பிரசன்ன வெங்கடேஷ் தனது இரு சக்கர வாகனத்தில் உறவினர்களின் வீடுகளுக்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக உசிலம்பட்டிக்கு சென்றார்.

பைக் மீது தனியார் வேன் மோதி விபத்து

பின்னர் அங்கிருந்து இரவு தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அவரது இரு சக்கர வாகனமானது உசிலம்பட்டியில் உள்ள பேரையூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த தனியார் வேன், பிரசன்ன வெங்கடேஷ் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பிரசன்ன வெங்கடேஷ் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாலையில் துடி துடித்துக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க: இன்ஸ்டாகிராம் ரூபத்தில் வந்த எமன்…திருமணமான மகளை கொலை செய்த தந்தை…நிர்கதியான 2 வயது பெண் குழந்தை!

தீவிர சிகிச்சையில் பிரிந்த இளைஞரின் உயிர்

உடனே, அந்த வழியாக சென்றவர்கள் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசன்ன வெங்கடேஷை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் புது மாப்பிள்ளை பிரசன்ன வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

சாலை விபத்தில் புது மாப்பிள்ளை பலியான சோகம்

பின்னர், இந்த விபத்து குறித்து பிரசன்ன வெங்கடேசன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவரது பைக்கின் மீது மோதிய தனியார் வேனின் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதற்கான பத்திரிகைகளை உறவினர்களுக்கு கொடுக்க சென்ற புது மாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: கோவையில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து சம்பவம்…கைதான மாணவர் பரபரப்பு வாக்குமூலம்!

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..