முதலமைச்சர் கோப்பை… 3% இட ஒதுக்கீட்டில் அரசு வேலை – உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Udhayanidhi Stalin : துணை முதல்வர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பை 2025ஐ துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய அவர் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு மூலம் அரசு வேலை அறிவித்தார்.

முதலமைச்சர் கோப்பை... 3% இட ஒதுக்கீட்டில் அரசு வேலை - உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின்

Published: 

07 Oct 2025 20:48 PM

 IST

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் அக்டோபர் 7, 2025 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு துணை முதல்வர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  (Udhayanidhi Stalin) முதலமைச்சர் கோப்பை 2025ஐ துவங்கி வைத்தார். நிகழ்வில் அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் ஒலிம்பிக் கோப்பை என இந்த முதலமைச்சர் கோப்பை அழைக்கப்படுகிறது என்றார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

3 சதவிகித இட ஒதுக்கீட்டில் அரசு வேலை

நிகழ்வில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாணவர்களுக்கு மட்டும் இல்லை. விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொம். முதலமைச்சர் கோப்பைக்கு ரூ.37 கோடி அளவுக்கு பரிசு தொகை வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க : தீபவாளிக்கு மக்கள் ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எப்படி முன்பதிவு செய்வது? விவரம் இதோ

முதலமைச்சர் கோப்பையில் வெற்றிபெற்றால் அந்த சான்றிதழ் மூலம் 3 சதவிகித இட ஒதுக்கீட்டில் அரசு வேலை வழங்க கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு பலருக்கு கிடைக்கும். அதற்கான தொடக்கமாக முதலமைச்சர் கோப்பை போட்டிகள் இருக்கும். இந்த போட்டிகள் 13 நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் அக்டோபர் 14, 2025 வரை நடைபெறும் என்று பேசினார்.

முதலமைச்சர் கோப்பை குறித்து உதயநிதி ஸ்டாலினின் பதிவு

 

இதையும் படிக்க : கனமழை எதிரொலி…. மாணவர்களின் பாதுகாப்புக்கு கடைபிடிக்க வேண்டிய 6 அறிவுரைகள் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”தமிழ்நாட்டின் ஒலிம்பிக்ஸ் என்று போற்றப்படும் முதலமைச்சர் கோப்பையின் இந்தாண்டுக்கான மாநில அளவிலானப் போட்டிகளை அக்போடபர் 7, 2025 அன்று தொடங்கி வைத்தோம். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களின் திறமையை அடையாளம் காண துணை நிற்பதில் மகிழ்கிறோம். இப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும். களம் நமதே என்று குறிப்பிட்டுள்ளார்.