திடீரென ஊருக்குள் புகுந்து மளிகை கடையின் கதவை தட்டிய யானை.. பழனியில் பரபரப்பு சம்பவம்!
Wild Elephant Enters Village In Palani | பழனியை சுற்றியுள்ள மலை கிராமங்களில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அந்த வகையில், அண்ணா நகர் என்ற பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை அங்குள்ள மளிகை கடையின் கதவை தட்டிவிட்டு சென்றுள்ளது.

ஊருக்குள் புகுந்த யானை
பழனி, ஏப்ரல் 09 : தமிழகத்தில் (Tamil Nadu) மலை பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்துவிடுவது, சாலைகளில் நின்றுக்கொண்டு வாகன ஓட்டிகளை பயணம் செய்ய விடாமல் செய்வது உள்ளிட்ட செயல்களை செய்து வருகின்றன. இந்த நிலையில், பழனியில் உள்ள ஒரு கிராமத்திற்குள் திடீரென காட்டு யானை புகுந்ததால் அந்த கிராம் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பழனி கிராமங்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை
பழனி அருகே மலை அடிவாரத்தில் உள்ள அண்ணா நகர், தேக்கந்தோட்டம், புளியமரத்துசெட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை வனத்தில் இருந்து வெளியே வந்து மலைப்பாதை மற்றும் கிராமங்களில் உலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. அவ்வாறு ஊருக்குள் வரும் காட்டு யானைகள் சாலைகளுக்கு நடுவே நின்றுக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : தலைமை செயலாளர் மாற்றம்.. தேர்தல் ஆணையத்தை சாடிய முதல்வர் ஸ்டாலின்
திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானை
அந்த வகையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த காட்டு யானை அந்த பகுதியில் உள்ள மளிககை கடை ஒன்றின் கதவை சேதப்படுத்தியுள்ளது. பிறகு, சிறிது நேரம் அங்கேயே நின்றுக்கொண்டு இருந்துள்ளது. அதன் பின்னர், அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : தேமுதிகவில் இருந்து விலகுவதாக மீசை ராஜேந்திரன் அறிவிப்பு.. சீட் தராததால் அதிருப்தி என தகவல்
வனத்துறைக்கு கோரிக்கை வைத்த பொதுமக்கள்
இவ்வாறு யானை அடிக்கடி ஊருக்குள் உலா வருவதால் தாங்கள் கடுமையான சிக்கல்களை எதிர்க்கொண்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்றும் அதற்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானை மளிகை கடையின் கதவை தட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.