தவெக கொடி நிறத்தில் விசில்..ஆன்லைனில் அமோக விற்பனை..!
Tvk Symbol Whistle: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறத்திலும், VOTE FOR TVK என்ற வாசகத்துடனும் ஆன்லைனில் விசில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த விசில் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், அந்தக் கட்சிக்கு இலவச பிரசாரமாக மாறியுள்ளது.

தவெக விசில் விற்பனை அமோகம்
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. இந்த சின்னம் அந்த கட்சிக்கும், கட்சியின் தலைவர் விஜய்க்கும் மிக நெருக்கமானதாகவும், எளிதில் மக்களிடம் சென்று சேரும் வகையிலும் இருப்பதாக அந்த கட்சி வட்டாரம் சார்பில் கூறப்படுகிறது. இந்த சின்னம் அறிவிக்கப்பட்ட பிறகு அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கைகளில் விசில் 11- ஆம் விரலாக மாறிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவுக்கு அவர்களுடன் விசில் பயணம் செய்து வருகிறது. அதன்படி, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விசில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் விசிலானது தமிழக வெற்றிக் கழக கொடியின் நிறத்திலும், அதில், ஒரு புறம் VOTE FOR TVK என்றும் மற்றொரு புறம் TVK என்ற வாசகத்துடன் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.
6 தவெக விசில்கள் அடங்கிய பாக்கெட்
இதனால், தவெகவினர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த விசிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சாதாரணமாக கடைகளில் ஒரு விசில் ரூ. 10 முதல் ரூ.25 வரை கிடைக்கும். ஆனால், ஆன்லைனில் ஆர்டர் செய்தால் 6 விசில்கள் அடங்கிய ஒரு பாக்கெட் ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. VOTE FOR TVK என்ற வாசகத்துடன் தயார் செய்யப்பட்டுள்ள 2 விசில்கள் ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில், குறிப்பாக அமேசான் இணையதளத்தில் இந்த விசில் விற்பனை அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: எனக்கு எதிரிகள் யாரும் இல்லை… – விஜய்யின் விமர்சனத்துக்கு முதல்வர் பதில்?
தவெகவுக்கு பிரசாரமாக மாறும் விசில் விற்பனை
இதனால், சிறுவர்கள் முதல் தமிழக வெற்றிக் கழகத்தினர் வரை இந்த விசிலை பயன்படுத்தி வருகின்றனர். இது அந்த கட்சிக்கு ஒரு வகையில் பிரச்சாரம் செய்வது போன்றும் ஆகிறது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 சின்னங்கள் அடங்கிய பட்டியல் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் ஒரு சின்னத்தை கட்சிக்கு வழங்குமாறு தவெக சார்பில் கோரிக்க வைக்கப்பட்டிருந்தது. இதில், விசில் சின்னத்துக்கு தமிழக வெற்றி கழகத்தினர் முன்னுரிமை அளித்திருந்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம்
அதன்படி, முதலில் தேர்தல் சின்னம் கோரும் கட்சிக்கு முன்னுரிமை என்பதன் அடிப்படையில், தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு கட்சியினர் சார்பில் பெரும் வரவேற்பு இருந்தது. அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் விஜய்க்கு பெரிய அளவிலான விசில் பரிசாக வழங்கப்பட்டிருந்தது.\
மேலும் படிக்க: அரசியல் கட்சி தலைவருக்கான பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி…என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா!