பூத் நிலை அலுவலர்கள் என்றால் யார்?.. அவர்களின் பணிகள் என்ன என்ன?

Booth Level Officer | இந்திய தேர்தல்களில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்களாக பூத் நிலை அலுவலர்கள் உள்ளனர். இந்த நிலையில், பூத் நிலை அலுவலர்கள் என்றால் யார், தேர்தல்களில் அவர்களின் பணிகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக இருக்கலாம்.

பூத் நிலை அலுவலர்கள் என்றால் யார்?.. அவர்களின் பணிகள் என்ன என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

26 Mar 2026 01:18 AM

 IST

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடைபெற உள்ளது. ஏப்ரல் 23, 2026 அன்று தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தேர்தல் எந்த வித சிக்கல்களும் இல்லாமல் சுமூகமாக நடைபெறுவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்பான மற்றும் நேர்மையான முறையில் நடைபெறுவதற்கான பல்வேறு துறைகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அவர்களில் மிக முக்கியமானவர்கள் தான் பூத் நிலை அலுவலர்கள் (BLO – Booth Level Officer). இந்த நிலையில், பூத் நிலை அலுவரல்கள் யார், அவர்களின் பணி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பூத் நிலை அலுவலர்கள் என்றால் யார்?

இந்த தேர்தல்கள் மிகவும் சுமூகமாக நடைபெற முக்கிய பங்காற்றுபவர்கள் தான் பூத் நிலை அலுவலர்கள். இவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI – Election Commission of India) அறிவுரைப்படி பல்வேறு பணிகளை மேற்கொள்வர். உதாரணமாக தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள் சுமார் 234 தொகுதிகளாக பிரித்து தேர்தல் நடத்தப்படும். இந்த ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 10-க்கும் மேற்பட்ட பூத்கள் அமைக்கப்படும். இந்த பூத்களில் வாக்குப்பதிவு சீராக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்வதே இவர்களின் பிரதான நோக்கமாக இருக்கும். இதுதவிர தேர்தல் சார்ந்த மேலும் பல பணிகளையும் அவர்கள் மேற்கொள்வர்.

இதையும் படிங்க : அதிமுக வசமிருந்த 19 தொகுதிகளில் களம் காணும் பாஜக… எதற்காக இந்த திட்டம்… பின்னணி என்ன!

பூத் நிலை அலுவலர்களின் பணிகள் என்ன என்ன?

  • வாக்காளர் பட்டியலில் புதிய வாக்களர்களை இணைத்தல், திருத்தல் செய்தல் மற்றும் இடமாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை பெற்று அவற்றி மீது நடவடிக்கை எடுப்பது.
  • தகுதியுள்ள வாக்காளர்களின் தகவல்களை சேகரித்து, தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்குதல்.
  • வாக்காளர்களுக்கு படிவம் 6, 6B, 7 மற்றும் 8 போன்ற விண்ணப்பங்களை வழங்கி அவற்றை பூர்த்தி செய்ய உதவுவது.
  • வாக்குச்சாவடியில் எந்த விதமான முறைகேடுகள் இன்றி வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்வது, வாக்காளர்களுக்கு வாக்களிக்க உதவி செய்வது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உதவுதல்.
  • வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிப்பார்த்தல்.

இதையும் படிங்க : திமுக – காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம்.. ஒரே தொகுதியில் இரு கட்சிகளும் போட்டியிடும் சூழல்!

மேற்குறிப்பிட்ட இந்த முக்கிய பணிகள் பூத் நிலை அலுவலர்களின் மிக முக்கிய பணிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
அதிமுக வசமிருந்த 19 தொகுதிகளில் களம் காணும் பாஜக… எதற்காக இந்த திட்டம்… பின்னணி என்ன!
கமலின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும். டார்ச் லைட்டுக்கு அனுமதி – மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை
M.R.K.Panneerselvam Tamil Nadu Election: அமைச்சர் பதவிக்கு அடித்தளமான குறிஞ்சிப்பாடி தொகுதி.. மீண்டும் வெற்றிக் கனியை சுவைப்பாரா எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!
எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்பரையில் தமிழிசை… மைலாப்பூரில் போட்டியிட திட்டமா?
விஜய் பிரச்சாரம் செய்யலாம் – தேர்தல் ஆணையம் அனுமதி
C. V. Ganesan Tamil Nadu Election: திட்டக்குடியில் இருமுறை வெற்றி பெற்ற சி.வெ.கணேசன்.. இந்த முறை வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..