ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரம்.. தகவல்களை அறிந்துக்கொள்ள இணைய ஏற்பாடு செய்த ECI!

Voting Details Quick Update | தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் சிக்கல் இன்றி வாக்களிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாக்குப்பதிவு தொடர்பான முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரம்.. தகவல்களை அறிந்துக்கொள்ள இணைய ஏற்பாடு செய்த ECI!

மாதிரி புகைப்படம்

Published: 

19 Apr 2026 08:02 AM

 IST

சென்னை, ஏப்ரல் 19 : தமிழகத்தில் விரைவில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அது தொடர்பான முக்கிய தகவலை இந்திய தேர்தல் ஆணையம் (ECI – Election Commission Of India) வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தல் தினத்தில் வாக்குப்பதிவு விவரங்கள் 2 மணி நேர இடைவெளியில் அறிந்துக்கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த முக்கிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும் தமிழ்நாடு

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல் 21, 2026 அன்று மாலை பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. திமுக, அதிமுக, தவெக, நாதக என பலமுணை போட்டியாக இந்த தேர்தல் அமைய உள்ளது.

இதையும் படிங்க : தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போடக்கூடிய வாக்கு – தமிழக வளர்ச்சிக்கான தடைக்கல்.. முதல்வர் ஸ்டாலின்

தேர்தலுக்காக ஒருபுறம் அரசியல் கட்சிகள் தீவிர பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மற்றொரு புறம் தேர்தல் ஆணையம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்களுக்கு வாக்கு சீட்டு விநியோகம் உள்ளிட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான், வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடுவது குறித்த முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகும்

தேர்தல் நடைபெறும் தினத்தில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் குறித்து அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு விவரங்களை அனைவரும் கண்டறியும் வகையில் தேர்தல் ஆணையம் நெட் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் வேட்பாளர் டர்ன் அவுட் என்ற பிரிவில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்களித்த மக்களின் எண்ணிக்கையை சதவீத அடிப்படையில் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க : தொகுதி மறுவரையறை எதிர்ப்பதன் மூலம் தமிழகத்தின் எம்.பிக்கள் எண்ணிக்கை குறையக்கூடும் – எடப்பாடி பழனிசாமி

தேர்தல் ஆணையத்தின் இந்த ஏற்பாடு மூலம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை அறிந்துக்கொள்ளலாம்.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..