விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் திருப்பம்.. சதை துணுக்கு மூலம் துப்பு துலக்கிய போலீஸ்.. சிக்கியது எப்படி?

Vilathikulam Student Harassment: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் 12- ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்து 9 நாள்களுக்கு பிறகு அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் திருப்பம்.. சதை துணுக்கு மூலம் துப்பு துலக்கிய போலீஸ்.. சிக்கியது எப்படி?

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி பாலியல் கொலையில் குற்றவாளி கைது

Updated On: 

19 Mar 2026 14:01 PM

 IST

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் பிளஸ் 2 தேர்வு எழுதி வந்த மாணவி கடந்த மார்ச் 10- ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். மாணவி சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த பெற்றோர் அந்தப் பகுதியில் சென்று பார்த்தனர். அப்போது, அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர். இதில், சம்பவ இடத்தில் பதிவான செல்போன் சிக்னல்கள் உள்ளிட்டவற்றின் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், 9 நாட்களுக்குப் பிறகு அந்த மாணவியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

1,600 செல்போன் சிக்னல்கள் ஆய்வு

குறிப்பாக சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதிவான சுமார் 1,600 செல்போன் சிக்னல்களின் எண்கள் குறித்த தகவல்களை சைபர் கிரைம் போலீசார் மூலம் திரட்டி விசாரணை நடத்தி வந்தனர். இதில், 5 பேரை சந்தேகத்துக்கிடமான வகையில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் அவர்களிடம், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கிடைத்த முடிவுகளுடன் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் ரத்தம் மற்றும் அந்த பகுதியில் கிடைத்த தடயங்கள், முக்கியமாக மாணவியின் நகத்தில் இருந்த சதை துணுக்கு ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பார்த்தனர். இதில், ஒருவரின் டிஎன்ஏ மாதிரிகள் ஒத்துபோனதாக தெரிகிறது.

மேலும் படிக்க: திருவண்ணாமலையில் 53 வெண்கல சுவாமி சிலைகள் கடத்தலா? தேர்தல் பறக்கும் படை விசாரணை!

மாணவி உடல் கிடைந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா

இதே போல, மாணவி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்த காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ஒரு மோட்டார் சைக்கிள் பதிவாகி இருந்தது. அந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த வாகனம் ராமநாதபுரத்தை சேர்ந்தது எனவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடு போனது எனவும் தெரியவந்தது. அந்த வாகனம் திருடு போன இடத்தில் இருந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்வதில் சம்பந்தப்பட்ட நபரின் உருவம் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.

கொலை சம்பவத்தில் கைதான நபர் குறித்த விவரம்

அதன்படி, இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் (எ) தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டயைபுரத்தில் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தர்ம  முனீஸ்வரன் வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு சென்றிருந்த நிலையில், தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் வைத்து அவரை கைது செய்தனர்.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா ரத்து..! பக்தர்கள் அதிர்ச்சி

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்