பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் தவெக தலைவர் விஜய் – வெளியான அறிவிப்பு

TVK Vijay : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாமல்லபுரம் ஓட்டலில் மார்ச் 7, 2026 அன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை மகளிர் தினவிழா நடைபெறுகிறது. மகளிர் தினத்தை ஒட்டி தவெக விழாவில் பெண்களுக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிப்பு வெளியிடவுள்ளார்.

பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் தவெக தலைவர் விஜய் - வெளியான அறிவிப்பு

தவெக தலைவர் விஜய்

Updated On: 

06 Mar 2026 20:43 PM

 IST

சென்னை, மார்ச் 6 : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாமல்லபுரம் ஓட்டலில் மார்ச் 7, 2026 அன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை மகளிர் தினவிழா நடைபெறுகிறது. மகளிர் தினத்தை ஒட்டி தவெக விழாவில் பெண்களுக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிப்பு வெளியிடவுள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் தவெக சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்படும் என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து, தொகுதி பங்கீடு தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையல் இந்த தேதர்தலில் தவெக தனித்து களம் காணவிருக்கிறது.

பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் விஜய்

இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் மார்ச் 7, 2026 அன்று மாமல்லபுரத்தில் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் விஜய், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான திட்டங்கள் குறித்து விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : போடி தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ்?.. மகன் ரவீந்தரநாத் அறிவாலயத்தில் விருப்ப மனு!

மகளிர் தின நிகழ்ச்சி குறித்து தவெக முக்கிய அறிவிப்பு

 

இதையும் படிக்க : தேமுதிக கனவு நிறைவேறியது… நாடாளுமன்றம் செல்லும் கட்சியின் முதல் எம்.பி.. யார் இந்த எல்.கே.சுதீஷ்!

மேலும் அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் தவிர வேறு யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என தவெக அறிவித்துள்ளது. எனவே வேறு யாரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வரவேண்டாம் எனவும் தொலைக்காட்சி நேரலையில் நிகழ்ச்சிகளை காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தவெக சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..