Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யாருக்காக இந்த ஆட்சி? – தமிழக அரசை கேள்வி எழுப்பிய விஜய்

TVK Vijay: சென்னை - திருத்தணி புறநகர் ரயிலில் வடமாநில தொழிலாளர் ஒருவர் 4 சிறுவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட விஜய், யாருக்காக இந்த ஆட்சி? என கேள்வி எழுப்பியுள்ளார்.

யாருக்காக இந்த ஆட்சி? – தமிழக அரசை கேள்வி எழுப்பிய விஜய்
விஜய் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Dec 2025 18:33 PM IST

சென்னை, டிசம்பர் 30:  சென்னையில் வட மாநில இளைஞர் ஒருவர் 4 சிறுவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகும் நிலையில் 4 சிறுவர்கள் கத்தியால் வட மாநில இளைஞரை தாக்கும் வீடியோ அதில் இடம் பெற்றுள்ளது.இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 4 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இது தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திருத்தணியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம், தமிழக அரசின் அலட்சியத்தையும் பொறுப்பற்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்துவதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக விஜய் கண்டனம்

இந்த சம்பவம்  அவர் தனது அறிக்கையில், தமிழகத்தின் எதிர்காலம் எந்த அபாயகரமான பாதையில் பயணிக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சென்னை முதல் திருத்தணி வரை சென்ற ரயிலில், சில இளைஞர்கள் மற்றொரு இளைஞரை கொடூரமாக தாக்கிய சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சம்பவங்கள், சமூகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்து வருவதை வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல் வழக்கு…சிபிஐ விசாரணை வளையத்தில் வருகிறாரா விஜய்!

இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இளைஞர்கள் தவறான பாதையில் செல்லும் முன்பே அதை அரசு கண்டறிந்து தடுக்கத் தவறியுள்ளதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார். “இளைஞர்கள் தவறான பாதையில் சென்று தங்கள் வாழ்க்கையை சீரழித்தால் நமக்கு என்ன” என்ற மனநிலையிலேயே அரசு செயல்படுகிறது என அவர் விமர்சித்துள்ளார்.

விஜய்யின் சமூக வலைதள பதிவு

 

மேலும், தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால் இளைஞர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களை சரியான பாதைக்கு வழிநடத்த எந்தத் திட்டங்களும் இல்லை என்றும், தரமான கல்வி பெற ஏற்ற சூழல் இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : உமன் பவரால் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.. மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் பெருமிதம்..

தகுதியான கல்வி பெற்ற இளைஞர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புதுமை, புதிய முயற்சிகள் மற்றும் தொழில் தொடக்கங்களுக்கு அரசு எந்த ஊக்கமும் வழங்கவில்லை. இவ்வாறு எந்த அடிப்படை வசதிகளையும் வழங்காமல், யாருக்காக இந்த அரசு ஆட்சி நடத்துகிறது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

தற்போதைய ஆட்சியின் மீதமுள்ள காலத்திலாவது, போதைப்பொருள் கடத்தலை முழுமையாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தை காக்க அரசு உடனடியாக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.