‘அண்ணன் செங்கோட்டையன்’.. வரவேற்பு தெரிவித்து விஜய் வீடியோ வெளியீடு!

தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சரை வரவேற்று விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செங்கோட்டையனை அண்ணன் என்று குறிப்பிட்டு, அவரது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை புகழ்ந்து பேசியுள்ளார். மேலும், அவரது அனுபவம் தவெகவிற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘அண்ணன் செங்கோட்டையன்’.. வரவேற்பு தெரிவித்து விஜய் வீடியோ வெளியீடு!

செங்கோட்டையனை வரவேற்று விஜய் வீடியோ வெளியீடு

Updated On: 

27 Nov 2025 15:36 PM

 IST

சென்னை, நவம்பர் 27: தவெகவில் இணைந்த செங்கோட்டையனை வரவேற்று அக்கட்சியின் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணன் செங்கோட்டையனின் வருகை தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக, இன்று காலை செங்கோட்டையன் வருவதற்கு முன்பே தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜய் அவரை வரவேற்க தயாராக இருந்தார். தொடர்ந்து, காலை முதல் ஈரோட்டில் இருந்து வருகை தந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அனைவரையும் வரவேற்ற தவெக நிர்வாகிகள் அவர்களை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். சரியாக 10 மணிக்கு தவெக அலுவலகம் வந்த செங்கோட்டையனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியே வந்து வரவேற்பு தெரிவித்து அலுவலகத்திற்குள் அழைத்துச்சென்றார். தொடர்ந்து, விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து விஜய் வரவேற்பு தெரிவித்தார். அதோடு, கட்சியின் உறுப்பினர் அட்டையையும் வழங்கி, அவருக்கு கட்சித் துண்டையும் அணிவித்தார்.

இதையும் படிக்க : கரையை கடந்த ‘சென்யார்’… உருவாகும் புதிய புயல்.. தமிழகத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை

விஜய் வெளியிட்ட வீடியோ:

செங்கோட்டையனை வரவேற்று விஜய் வெளியிட்ட அந்த வீடியோவில், 20 வயது இருக்கும்போதே புரட்சித்தலைவர் எம்ஜிஆரை நம்பி அவரது கட்சியில் இணைந்தவர் அண்ணன் செங்கோட்டையன் என்றும், அந்த சின்ன வயதிலேயே எம்எல்ஏ என்னும் பொறுப்பை ஏற்றவர். அதன்பின், அவரது அந்த பயணத்தில் அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

அண்ணன் செங்கோட்டையன்:

அதோடு, இப்படி, 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இன்று அவரது அரசியல் அனுபவத்தையும், அவரது அரசியல் களப்பணியையும் நமது தவெகவிற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் அவருக்கும், அவருடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க : அதிமுகவை விட இரண்டரை மடங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.பி:

விஜய் முன்னிலையில் ஈரோட்டில் இருந்து தனிப்பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்ட செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கும் விஜய் கட்சி உறுப்பினர் அட்டை வழங்கி, பொன்னாடை போர்த்தி வரவேற்பு தெரிவித்தார். அதோடு, அவர்கள் அனைவருக்கும் தவெகவின் மஞ்சள், சிவப்பு துண்டையும் விஜய் அணிவித்து வரவேற்றார். குறிப்பாக, இதில் அதிமுகவின் முன்னாள் எம்.பி சத்தியபாமாவும், விஜய் முன்னிலையில் அக்கட்சியல் இணைந்தார். அவருக்கும் விஜய், கட்சியின் துண்டை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார்.

அனு தாக்குதல்களை தாங்கக் கூடிய செயற்கை மிதக்கும் தீவை உருவாக்கும் சீனா
தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?
ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்!