ஆட்சியில் பங்கு.. இது திருமா காலம் – வன்னி அரசு பகிர்ந்த பரபரப்பு தகவல்
TVK Vijay : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சியில் பங்கு அளிக்க தவெக முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிபடுத்தும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் - திருமாவளவன்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லீம் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதனையடுத்து ஆளுநரை சந்தித்து தனது பெரும்பான்மையை தவெக தலைவர் விஜய் நிரூபித்துள்ளார். இதனையடுத்து அவர் ஆட்சியமைப்பதில் இருந்த தடைகள் அகன்றுள்ளன. விஜய் முதல்வராக பதவியேற்கும் நாள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியில் பங்கு?
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சியில் பங்கு அளிக்க தவெக முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிபடுத்தும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு இது திருமா காலம்-இனி உயர்வோம் மேலும் மேலும்! என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் பங்கு வகிக்கும் என்பதை மறைமுகமாக உறுதிபடுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.