இன்று முதல் தவெக விருப்ப மனு விநியோகம்.. பரபரக்கும் தேர்தல் பணிகள்!!
TVK election application forms: இந்த மனுக்களை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பெறுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வாங்குவதற்காக மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிடம் தொண்டர்கள், நிர்வாகிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க உள்ளனர்.

கோப்புப் புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 06: சட்டசபை தேர்தலை சந்திக்க தவெக ஆயத்தமாகி வருகிறது. இதையொட்டி, தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், தேர்தலை தனித்து சந்திப்பதா? கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்று தவெக முடிவு செய்ய முடியாத நிலையிலும் உள்ளது. தற்போது வரை அக்கட்சியை கூட்டணிக்கு யாரும் அணுகியதாக தெரியவில்லை. ஆட்சியில் அதிகாரம் என்று தமிழக வரலாற்றில் இல்லாத கூட்டணி சலுகைகள் எல்லாம் விஜய் அறிவித்திருந்தார். எனினும், காங்கிரஸ் கட்சியை தவிர்த்து வேறு எந்த கட்சியுன் அதனுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், தேர்தலை தனித்து சந்திக்கும் முடிவுக்கு தவெக வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ராமதாஸ் தரப்பு பாமகவுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: தமிழகம்-புதுச்சேரியில் பிரதமர் மோடி 2 நாள்கள் விசிட்..பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்கிறார்…குஷியில் பாஜகவினர்!
பிப்.14 வரை விருப்ப மனு விநியோகம்:
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தவெக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இன்று (பிப்.06) முதல் பெறப்படும் இருக்கிறது. இதற்காக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் விருப்பு மனுக்கள் வாங்கப்பட உள்ளது. தொடர்ந்து, 14-ந் தேதி வரை விருப்பு மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில நிர்வாகிகள் குழு:
இந்த மனுக்களை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பெறுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வாங்குவதற்காக மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிடம் தொண்டர்கள், நிர்வாகிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க உள்ளனர். முதல் நாளாக இன்று, மாவட்ட செயலாளர்கள் விருப்பு மனுக்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் அறிக்கை இணையதளம்:
இதனிடையே, தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டியவை குறித்துப் பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை அனுப்பலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையத்தளத்தில் https://tvkmanifesto2026.com பொதுமக்கள் இந்த இணைப்பிற்குச் சென்று, தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்..தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்..பரபரக்கும் அரசியல் களம்!
ஸ்தம்பித்த இணையதளம்:
இதனிடையே, அறிவிக்கப்பட்ட அந்த இணையத்தளமானது ஒரே நேரத்தில் அதிகப்படியாகப் பயன்படுத்தப்பட்டதால், நேற்றிரவு ஸ்தம்பித்தது. இதனால், பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என அக்கட்சி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.