சிபிஐ விசாரணை – உற்சாகமாக கைகாட்டியபடி வெளியே வந்த விஜய் – வைரலாகும் வீடியோ

TVK Vijay : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 3வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். கிட்டத்தட்ட 7 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், தனது ஆதரவாளர்களுக்கு கைகாட்டியபடி அவர் வெளியேறிய வீடியோ வைராகி வருகிறது.

சிபிஐ விசாரணை - உற்சாகமாக கைகாட்டியபடி வெளியே வந்த விஜய் - வைரலாகும் வீடியோ

விஜய்

Updated On: 

15 Mar 2026 19:34 PM

 IST

கரூர் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 3வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். இதற்காக அவர் மார்ச் 14, 2026 அன்று ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகிய கட்சி நிர்வாகிகளுடன் டெல்லி சென்றார். இந்த நிலையில் மாரச் 15, 2026 அன்று சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் பங்கேற்ற அவரிடம், கிட்டத்தட்ட 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அவரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்த பிறகு விசாரணை நிறைவு பெற்றது. இதனையடுத்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறும்போது காரின் வின்ஷீல்டு வழியாக தனது ஆதரவாளர்களை பார்த்து கைகாட்டியபடி வெளியேறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு

ஏற்கனவே ஜனவரி 13, 2026 மற்றும் ஜனவரி 19, 2026 என 2 முறை சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகி கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தார். இந்த நிலையில் தற்போது 3வது முறையாக விஜய் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் 9, 2026 அன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக கோரி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அன்றைய தினம் தவெக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றதால் அன்றைய தினம் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு விஜய் தரப்ப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனயைடுத்து மார்ச் 15, 2026 அன்று சிபிஐ விசாரணைக்கு அவர் கட்டாயம் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

இதையும் படிக்க : Tamil Nadu Election schedule : தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் .. வாரியாக முழு விவரம்

இதனை ஏற்று விஜய் தனது கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருடன் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இதனையடுத்து மாரச் 15, 2026 அன்று டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.  அப்போது காரில் இருந்தபடி தனது ஆதரவாளர்களை பார்த்து கைகாட்டியபடியே வெளியேறியது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய விஜய்

 

இதையும் படிக்க : திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு எப்போது?.. முதல்வருடன் கனிமொழி ஆலோசனை!!

மீண்டும் மார்ச் 16, 2026 அன்று சிபிஐ விசாரணை நடைபெறவிருப்பதாகவும் கூறப்டுகிறது. இதற்கிடையில் விஜய்யின் தவெகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவாரத்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தகவலை தவெக தரப்பில் மறுக்கப்பட்டு வருவதுடன் தவெக தனித்து களம் காணவிருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்