திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் போது மழை பெய்யுமா…வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன!
Karthigai Deepam Lighting Chance Of Rain: 18 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் ஏற்றப்படும் நிலையில் மழை பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் உண்ணாமுலையம்மன் கோவிலில் கார்த்திகை மாத தீப திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று டிசம்பர் 3-ஆம் தேதி தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அதற்காக திருவண்ணாமலையில் உள்ள 2668 அடி உயரமுடைய மலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த விழாவுக்காக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பொதுமக்களும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் பங்கேற்பார்கள்.
கார்த்திகை தீபம் ஏற்றும் நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
விழாவில், சுமார் 35 லட்சம் முதல் 45 லட்சம் பக்தர்கள் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், திரளான பக்தர்கள் தற்போதே கோவிலில் கூட தொடங்கியுள்ளனர். அவர்கள் அரோகரா கோஷத்துடன் கிரிவலம் சென்று வருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை உள்பட 18 மாவட்டங்களுக்கு கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால், கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நேரத்தில் மழை பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி மகா தீபம் ஏற்றப்படும் நேரத்தில் மிதமாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வலுவிழக்கும் தித்வா புயல்: இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!




வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் மழை…
கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் கடலோரப் பகுதிகள் வழியாக கடந்து தமிழகப் பகுதிகளில் மையம் கொண்டு அதிகளவில் மழைப் பொழிவை கொடுத்தது. இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும், பல இடங்களில் கனமழையும் பெய்தது.
அதிகளவு மழைப் பொழிவை கொடுத்த டிட்வா புயல்
சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் மழை அதிகளவு பொழிந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்த நிலையில், நேற்று காலை தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையிலும், வட மாவட்டங்களில் மழை பொழிந்தவாறு இருந்தது. பின்னர் சென்னையை ஒட்டிய கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகத்தில் நிலவி வருகிறது.
மேலும் படிக்க: கனமழை எச்சரிக்கை – இந்த மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
தீபம் ஏற்றும் நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
இதனால், திருவண்ணாமலை உள்பட 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நேரத்தில் மிதமான மழைப்பொழிவு இருக்கும் என்பதால், பொதுமக்கள் கொட்டும் மழையில் நனைந்தவாறு தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.