குஷியில் தென் மாவட்ட பயணிகள்.. நாளை முதல் வந்தே பாரத் ரயிலில் மேஜர் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Tirunelveli Vande Bharat Express : சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரயிலில் 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான (நாளை) முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் இருக்கைகள் எண்ணிக்கை 1,440 ஆக உயரக்கூடும். இதனால், தென்மாவட்ட பயணிகள் குஷியில் உள்ளனர்.

குஷியில் தென் மாவட்ட பயணிகள்.. நாளை முதல் வந்தே பாரத் ரயிலில் மேஜர் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை வந்தே பாரத் ரயில்

Updated On: 

23 Sep 2025 09:59 AM

 IST

சென்னை, செப்டம்பர் 23 :  சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் (Vande Bharat Rail)  2025 செப்டம்பர் 24ஆம் தேதியான நாளை முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 312 பயணிகள் பயணிக்கலாம். இது தென் மாவட்ட பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல்வேறு ரயில்களையும் மத்திய அரசு இயக்கி வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  வந்தே பாரத் ரயில்கள் விரைவாக செல்வதால் பெரும்பாலான பயணிக்ள இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தைச் பொறுத்தவரை சென்னை – நெல்லை, கோவை – சென்னை, கோவை – பெங்களூரு, பெங்களூரு – மதுரை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக நெல்லை  – சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதும். தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் நெல்லை சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணித்து வருகின்றனர். சென்னையில் நெல்லைக்கு செல்ல குறைந்தது 10 மணி முதல் 12 மணி நேரமாகும். ஆனால், வந்தே பாரத் ரயிலில் சென்றார் 7 மணி நேரத்தில் நெல்லைக்கு சென்றடையலாம். இதில் ஏசி ஜேர் காரில் 955 ரூபாயும், எக்ஸிக்யூட்டிவ் ஜேர் காரில் 2060 ரூபாயும் வசூலிக்கப்ப்டடு வருகிறது.பொருளாதார ரீதியாக பார்த்தால், உயர் நடுத்தர வர்க்க மக்களே இதில் பயணிக்க முடியும். இருப்பினும், நெல்லை சென்னை வந்தே பாரத் ரயிலில் பொதுமக்கள் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Also Read : நீலகிரிக்கு டூர் செல்ல பிளானா? யானைகள் முகாம் 4 நாட்கள் மூடல்.. வெளியான அறிவிப்பு

நெல்லை வந்தே பாரத் ரயிலில் மேஜர் மாற்றம்


குறிப்பாக, தொடர் விடுமுறை, பண்டிகை காலங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால், சில நேரங்களில் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்த நிலையில் தான், சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான நாளை முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முதலில் 8 பெட்டிகளுடன் மட்டுமே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. ஆனால், பயணிகளின் வருகை அதிகரிப்பை தொடர்ந்து, பெட்டிகள் எண்ணிக்கை 16 ஆக உயர்த்தப்பட்டது.

Also Read : உஷார்.. தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றவருக்கு நேர்ந்த சோகம்.. பறிபோன உயிர்!

தற்போது இன்னும் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நெல்லை சென்னை வந்தே பாரத் ரயில் பெட்டிகளுடன் நாளை முதல் (செப்டம்பர் 23) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் 312 இருக்கைகள் கூடுதலாக இருக்கும். தற்போது, 1,128 இருக்கைகள் மட்டுமே இருக்கிறது. 20 பெட்டிகளுடன் நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் பட்சத்தில் இருக்கைகளின் எண்ணிக்கை 1,440 ஆக உயரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.