தீபத்தூண் மேல்முறையீட்டு வழக்கு…உத்தரவை நிறைவேற்ற தனி நீதிபதி அவசரப்படுத்தியது ஏன்…உயர்நீதிமன்றம் கேள்வி!

Thiruparankundram Deepathoon Appeal Case: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த தனது உத்தரவை நிறைவேற்றுவதற்கு அவசரப்படுத்தியது ஏன் என்று மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது .

தீபத்தூண் மேல்முறையீட்டு வழக்கு...உத்தரவை நிறைவேற்ற தனி நீதிபதி அவசரப்படுத்தியது ஏன்...உயர்நீதிமன்றம் கேள்வி!

தீபத்தூண் வழக்கு மேல்முறையீடு விசாரணை

Updated On: 

17 Dec 2025 13:36 PM

 IST

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தனி நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று புதன்கிழமை (டிசம்பர் 17) விசாரணை நடைபெற்றது. இதில், மனுதாரர் தரப்பு தனது தரப்பு வாதங்களை முன் வைத்தது. அதில், தனி நீதிபதியின் உத்தரவை அரசு நிர்வாகம், மதுரை மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியோர் செயல்படுத்தவில்லை. இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கு முன்பாகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவது என்பது நம்பிக்கை சார்ந்த விஷயமாகும்.

தனி நீதிபதியின் உத்தரவில் தவறு இல்லை

தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும், குறையும் இல்லை. ஆவணங்களை முழுமையாக ஆராய்ந்த பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோயில் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற தவறியதே பதட்டமான சூழலுக்கு காரணம் ஆகும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றி இருந்தால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்காது. தனி நீதிபதியின் உத்தரவால் பிரச்சனை ஏற்படும் என்று கூறுவது பூச்சாண்டி காட்டுவதற்கு சமமாகும். பொது அமைதி பாதிக்கப்பட்டதாக கூறுவது சாக்குப் போக்கு காரணமாகும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: வேலூர் தங்க கோயிலில் ஜனாதிபதி முர்மு வழிபாடு…பலத்த போலீஸ் பாதுகாப்பு!

மனுதாரர் தரப்பு கேள்வி

அப்போது, குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் ஸ்ரீ ராம் மனுதாரரின் தரப்பு ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறினார். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றும் முன்னரே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கூடாது என்பதற்காகவே, அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டதாகவும் வாதம் முன் வைக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றுவதில் அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. இந்த உத்தரவை மதிக்காததன் காரணம் என்ன என்று மனுதாரர் தரப்பில் கேள்வி முன் வைக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் விளக்கேற்றுவது இந்து மதத்தின் முக்கிய சடங்கு ஆகும்.

உத்தரவை நிறைவேற்ற அவசரப்படுத்தியது ஏன்

அப்போது, தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி கனகராஜ் உத்தரவிட்டாரா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு கடந்த 1996- ஆம் ஆண்டு நீதிபதி கனகராஜ் தீபம் ஏற்றுவதற்கு உத்தரவிட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. தனது உத்தரவை நிறைவேற்றுவதற்காக தனி நீதிபதி அவசரப் படுத்தியது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சட்டத்தை நிறைவேற்ற தனி நீதபதி தனது கடமையை தான் செய்துள்ளார் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: அன்புமணி செய்வது வேதனையாக உள்ளது.. பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

ஜனவரி முதல் மக்களுக்கு காத்திருக்கும் ஷாக்.. அதிரடியாக உயரப்போகும் டிவி விலை..
அஷ்வின் கணிப்பில் 2026 ஐபிஎல் ஏலத்தில் கோடீஸ்வரர்களாக மாறக்கூடிய அறியப்படாத வீரர்கள்
நீங்க ரெட் கலர் லிப்ஸ்டிக் யூஸ் பண்றீங்களா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
சென்னை – நரசாபூர் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை.. நேரம், கட்டணம், வழித்தட விவரம்