அவனியாபுரத்தில் அனல்பறக்கும் ஜல்லிகட்டு.. அதிரடி காட்டும் காளைகள்.. முன்னிலை நிலவரம்!!
Madurai avaniyapuram jallikattu: காலை முதல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 5வது சுற்று முடிவில் 464 காளைகள் களம் கண்டுள்ளன. 109 மாடுகள் பிடிபட்டுள்ளன. இறுதிச்சுற்றுக்கு 16 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். தொடர்ந்து, 5வது சுற்று முடிவில் 16 காளைகளை பிடித்து அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி முதலிடம் வகித்து வருகிறார்.
மதுரை, ஜனவரி 15: மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்து வருகின்றன. சீறி வரும் காலைகளை வீரத்துடன் மாடுபிடி வீரர்கள் பிடித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு, அவனியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவில் பொதுமக்கள், மாடு பிடி வீரர்கள், உலகெங்கிலும் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். ஜல்லிகட்டு போட்டியை திமுக அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இன்று காலை தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 600 மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. போட்டிக்கான ஏற்பாடுகள் மிகுந்த பாதுகாப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார்கள், டிராக்டர்கள், பைக், கட்டில், பாத்திர பொருட்கள், ரொக்க பணம் ஆகியவை பரிசாக வழங்கப்பட உள்ளது.
அவனியாபுரம் ஜல்லிகட்டில் 5 சுற்றுகள் முடிவு:
அதன்படி, காலை முதல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 5வது சுற்று முடிவில் 464 காளைகள் களம் கண்டுள்ளன. 109 மாடுகள் பிடிபட்டுள்ளன. இறுதிச்சுற்றுக்கு 16 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். தொடர்ந்து, 5வது சுற்று முடிவில் 16 காளைகளை பிடித்து அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி முதலிடம் வகித்து வருகிறார். தொடர்ந்து, 9 காளைகளை பிடித்து அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் 2வது இடத்திலும், 6 காளைகளை பிடித்து சோழவாந்தனை சேர்ந்த பிரகாஷ் 3வது இடத்திலும் உள்ளனர்.
சுற்று வாரியாக படிபட்ட மாடுகள் நிலவரம்:
வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளின் திமிலை காளையர்கள் அடக்கி வருகின்றனர். முதல் பரிசாக வீரருக்கு காரும்,காளைக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளன. முதல் பரிசாக வீரருக்கு காரும்,காளைக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. முதல் சுற்றில் 100 மாடுகள் களம் கண்ட நிலையில், 11 மாடுகள் மட்டுமே பிடிபட்டன. 2வது சுற்றில் மொத்தம் 200 மாடுகள் களம் கண்ட நிலையில், 34 மாடுகள் பிடிப்பட்டன. 3வது சுற்றில் மொத்தம் 288 மாடுகள் களம் சென்ற நிலையில், 61 மாடுகள் பிடிப்பட்டது. 4வது சுற்றில் மொத்தம் 377 மாடுகள் களமிறங்கிய நிலையில், 89 மாடுகள் பிடிபட்டன. 5ம் சுற்று முடிவில் 464 மாடுகள் களமிறங்கிய நிலையில், 109 மாடுகள் பிடிபட்டுள்ளன.