Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குற்றால சாரல் திருவிழா தேதி மாற்றம்.. தென்காசி கலெக்டர் முக்கிய அறிவிப்பு.. எப்போது தெரியுமா?

Courtallam Saral Thiruvizha 2025 : குற்றால சாரல் திருவிழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குற்றா சாரல் திருவிழா 2025 ஜூலை 20ஆம் தேதி ஜூலை 27ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ககமல் கிஷோர் அறிவித்துள்ளார். முன்னதாக, 2025 ஜூலை 19ஆம் தேதி சாரல் திருவிழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்கான இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

குற்றால சாரல் திருவிழா தேதி மாற்றம்..  தென்காசி கலெக்டர் முக்கிய அறிவிப்பு.. எப்போது தெரியுமா?
குற்றால சாரல் திருவிழா
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 15 Jul 2025 09:06 AM

தென்காசி, ஜூலை 15 : தென்காசி மாவட்டம் குற்றால சாரல் திருவிழா (Courtallam Saral Thiruvizha) தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்தனாக, குற்றால சாரல் திருவிழா 2025 ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது  அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குற்றால சாரல் திருவிழா 2025 ஜூலை  20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பது குற்றாலம். குற்றாலத்திற்கு ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, சீசன் (Courtallam Season) காலமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மூன்று மாதத்திற்கு குற்றாலம் களைகட்டும். அந்த வகையில், தற்போது குற்றால சீசன் தொடங்கியுள்து. குற்றால சீசனை முன்னிட்டு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த் குளியல் இட்டு வருகின்றனர். அதே நேரத்தில், குற்றாள சீசன் தொடங்கியதும், ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், குற்றால சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த குற்றால சாரல் விழா 10 நாட்களுக்கு நடைபெறும்.  அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான குற்றால சாரல் விழா தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, குற்றால சாரல் திருவிழா 2025 ஜூலை 19ஆம் தேதி முதல்  27ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

குற்றால சாரல் திருவிழா தேதி மாற்றம்


இந்த நிலையில், அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, குற்றால சாரல் திருவிழா 2025 ஜூலை  20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர்  கமல் கிஷோர் அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம்  செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தோட்டக்கலை திருவிழா 2025 ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : தொழிலாளர்கள் கவலை: தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்… காரணம் என்ன?

என்னென்ன போட்டிகள்?

இந்த விழாவில், தென் மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள், கலாச்சாரக் குழுக்களின் நிகழ்ச்சிகள், பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு போட்டிகளும் நடைபெறும். அதன்படி, 2025 ஜூலை 20ஆம் தேதி பரதநாட்டியம், கரகாட்டம், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். 2025 ஜூலை 21ஆம் தேதி சிலம்பரம், கேரள கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கு போட்டிகள் நடைபெறும்.

2025 ஜூலை 22ஆம் தேதி யோகா போட்டி, நடனம் மற்றும் நாடகம், வில்லுப்பாட்டு நடைபெறும். 2025 ஜூலை 23ஆம் தேதி படகுப் போட்டிகள், நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சி, கொடைக்கானல், பூம்பாறையைச் சேர்ந்த குழுவினரின் தோடா நடனம், கர்நாடகக் கலைஞர்களின் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும்.

Also Read : கொரோனா-இன்ஃப்ளூயன்ஸா ஒரே பரிசோதனை: அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை

அடுத்தடுத்த நாட்களில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம், பாட்டு மற்றும் கவிதைப் போட்டி, திருநங்கைகளுக்கான நிகழ்ச்சி, சமையல் போட்டி, தினை சமையல் போட்டி, பளு தூக்கும் போட்டி, மிஸ்டர் குற்றாலம், நாட்டுப்புற கலைகள், நகைச்சுவை, நாய் கண்காட்சி, நடனம் மற்றும் நாடகம், நாட்டுப்புற கலைகள், மாடு ஆட்டம், மயிலாட்டம், மகாராஷ்டிரா கலைஞர்களின் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.