Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பொய்த்து போனதா வடகிழக்கு பருவமழை? இதுவரை இல்லாத அளவு குறைந்த மழை பதிவு – வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன தகவல்..

Northeast Monsoon: வட தமிழகமான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது; மிதமான மழை மட்டுமே பதிவாகி வருகிறது. இந்த சூழலில், இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொய்த்து போனதா வடகிழக்கு பருவமழை? இதுவரை இல்லாத அளவு குறைந்த மழை பதிவு – வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 22 Nov 2025 07:04 AM IST

வானிலை நிலவரம், நவம்பர் 22, 2025: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் நல்ல மழை பதிவு இருந்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து வடகிழக்கு பருவமழையின் தீவிரம் கணிசமாக குறைந்து காணப்படுகிறது. இந்த சூழலில், இதுவரை இல்லாத அளவு நவம்பர் மாதத்தில் மிகவும் மோசமான அல்லது மிகவும் குறைந்த அளவு மழை பதிவை இந்த ஆண்டு பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்தது.

மேலும் வங்கக்கடலில் புயல் உருவாகி, கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தேவையான மழையை பூர்த்தி செய்தது. ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து வருகிறது என தெரிவித்தார்.

மேலும் படிக்க: டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

டெல்டா மாவட்டங்களில் தொடரும் மழை:

கடந்த ஒரு வாரமாக, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பதிவாகி வருகிறது.

மிகவும் குறைந்த அளவு மழை – பிரதீப் ஜான்:


ஆனால் வட தமிழகமான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது; மிதமான மழை மட்டுமே பதிவாகி வருகிறது. இந்த சூழலில், இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மிகவும் மோசமான மாதமாக பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதத்தில் மழையின் அளவு பூர்த்தி அடையவில்லை என்றால், வடகிழக்கு பருவமழை காலத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய மொத்த மழையின் அளவு குறைந்து தான் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவின்படி,

  • 2018 – 151.1 மி.மீ
  • 2019 – 125.8 மி.மீ
  • 2020 – 23.3 மி.மீ
  • 2021 – 425.3 மி.மீ
  • 2022 – 178.5 மி.மீ
  • 2023 – 233 மி.மீ
  • 2024 – 140 மி.மீ
  • 2025 (தற்போதுவரை) – 50.9 மி.மீ மட்டுமே

பொதுவாக நவம்பர் மாதத்தில் கிடைக்கக்கூடிய மழையின் சராசரி அளவு 181.7 மில்லி மீட்டர் ஆகும்.