AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோடை வெயில் கொளுத்தும்.. லேசான மழைக்கும் வாய்ப்பு.. இன்றைய வானிலை அப்டேட் இதோ..

Weather Update: இன்று (மார்ச் 23) முதல் மார்ச் 26 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் இயல்பு நிலையிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதேசமயம், அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

கோடை வெயில் கொளுத்தும்.. லேசான மழைக்கும் வாய்ப்பு.. இன்றைய வானிலை அப்டேட் இதோ..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 Mar 2026 06:24 AM IST

Tamilnadu weather: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிய நிலையில், ஆங்காங்கே லேசான மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இன்னும் ஏப்ரல், மே மாதம் வருவதற்குள்ளே, வெப்பநிலை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், அதேசமயம் ஒரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், மன்னார் வளைகுடா முதல் தெற்கு மத்திய மகாராஷ்டிரா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

இதையும் படிக்க : அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டும்.. வெயில் குறையுமா?.. வானிலை அப்டேட் இதோ!!

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில் வானிலை நிலவரம்:

நாளையும் (மார்ச் 24) கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 25-03-2026 மற்றும் 26-03-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

27-03-2026 மற்றும் 28-03-2026: கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

இன்று (மார்ச் 23) முதல் மார்ச் 26 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் இயல்பு நிலையிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதேசமயம், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

இதையும் படிக்க : கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீ.. தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு துறை!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

Follow Us