இந்த 2 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. மற்ற பகுதிகளில் வெயில் கொளுத்தும்.. வானிலை அப்டேட்..
Today Weather Update: இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடை பொறுத்தவரை இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். 26.03.2026 மற்றும் 27.03.2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

கோப்புப் புகைப்படம்
Tamilnadu Weather: தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிய நிலையில், ஆங்காங்கே லேசான மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், மன்னார் வளைகுடா முதல் மேற்கு விதர்பா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்து வரும் நாட்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்கள்.. பாமகவிற்கு 18 இடங்கள்..
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (மார்ச் 34) கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறியுள்ளது.
வரும் நாட்களில் வானிலை நிலவரம்:
25.03.2026 மற்றும் 26.03.2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 27.03.2026 கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
28.03.2026 மற்றும் 29.03.2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை பொறுத்தவரை 24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல் இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. 26.03.2026 மற்றும் 27.03.2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
வெப்ப அளவின் மாறுபாடு:
அதேசமயம், இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடை பொறுத்தவரை இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். 26.03.2026 மற்றும் 27.03.2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
இதையும் படிக்க : கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீ.. தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு துறை!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.