Weather Update: பகலில் கடும் வெயில்.. இரவில் குளு குளு மழை .. எத்தனை நாட்களுக்கு?

Chennai Weather: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 22 வரை பல இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சென்னையில் அதிகாலை நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Weather Update: பகலில் கடும் வெயில்.. இரவில் குளு குளு மழை .. எத்தனை நாட்களுக்கு?

வானிலை நிலவரம்

Updated On: 

17 Sep 2025 14:27 PM

 IST

தமிழ்நாடு, செப்டம்பர் 17: சென்னையில் இரண்டாவது நாளாக நள்ளிரவில் மழை பெய்ததால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் வளிமண்டலம் மேல் எடுத்து சுழற்சி நிலவி வரும் நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மிதமான மலைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இன்று இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

இந்த வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, திருச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி, ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை செப்டம்பர் 18ஆம் தேதியும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:வடகிழக்கு மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை.. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி

சென்னையைப் பொறுத்தவரை இன்று பகல் நேரங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னனுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் துரைப்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதே போல் கண்ணகி நகர், பள்ளிப்பட்டு, ஆற்காடு, வேலூர், ஆகிய இடங்களில் 110 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க:  மேகவெடிப்பு கனமழை.. உத்தரகாண்டில் கொடூர வெள்ளம்!

தனியார் வானிலை ஆய்வாளரின் பதிவு

சென்னையை பொருத்தவரை கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நகரில் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும், அதிகாலையில் பணிக்கு செல்வோர் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த ஆறு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரவில் மழையும் காலையில் குளிர்ச்சியான மேகமூட்டமும்,  மீண்டும் மாலை வரை கடும் வெயிலும் என சுழற்சி முறையில் இருக்கும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை முழுவதும் மழை பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ள அவர், ஒரு மணி நேரத்திற்குள் 50 முதல் 70 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.