பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கவில்லையா? உங்களுக்கான சிறப்பு அறிவிப்பு!!

Thai pongal gift package: டோக்கன் தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பை இதுவரை வாங்கத் தவறியவர்கள் இன்று (ஜனவரி 14) சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் தலா ரூ.3,000 ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கவில்லையா? உங்களுக்கான சிறப்பு அறிவிப்பு!!

ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு

Updated On: 

14 Jan 2026 08:44 AM

 IST

சென்னை, ஜனவரி 14: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பொங்கல் சிறப்பு தொகுப்புடன், ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், ரேஷன் அட்டையுடைய 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 குடும்பங்களுக்கும், இலங்கை தமிழர் குடும்பங்களையும் சேர்த்து, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் தலா ரூ.3,000 ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் நலத்திட்ட விநியோகத்தை கடந்த ஜனவரி 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் டோக்கன் அடிப்படையில் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : திமுக-காவல்துறை தொடர்பாக சிபிஐ-யிடம் ஆதாரத்துடன் புகார்…பரபரப்பை கிளப்பிய சி.டி.ஆர். நிர்மல் குமார்!

டோக்கன் அடிப்படையில் பொங்கல் தொகுப்பு விநியோகம்:

அதாவது, இந்த பொங்கல் ரொக்கத்தொகை மற்றும் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அந்த டோக்கன்களில் எந்த தேதியில் அவர்கள் பொங்கல் பரிசை வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி, ஜனவரி 08, 2026 முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

டோக்கன் தேதிகளில் வாங்கிவில்லையா?

அந்த வகையில், டோக்கன் தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பை இதுவரை வாங்கத் தவறியவர்கள் இன்று (ஜனவரி 14) சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று வரை 2 கோடியே 9 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைரேகை பதிவாததால் சிக்கல்:

இதனிடையே, ரேஷன் கடைகளில் கைரேகை சரியாக பதிவாகாத காரணத்தினால், பல மூத்த குடிமக்களாலும் மற்றும் தனிநபர் அட்டைதாரர்களாலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளைப் பெற முடியவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு பலமுறை அலைந்தும், கடைக்காரர்கள் கைரேகை பதிவில்லாமல் அவர்களுக்கு பொங்கல் தொகுப்பு, ரொக்கப்பணத்தை வழங்க மறுப்புதாகவும் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது.

இதையும் படிக்க: பழைய பொருட்களை எரித்து, மேளம் கொட்டி உற்சாகம்.. களைகட்டிய போகி கொண்டாட்டம்!!

கருவிழி எந்திரம் முடக்கம்:

இதையடுத்து, ரேஷன் கடைகளில் கைரேகை சரியாக பதிவாகாத முதியவர்களுக்கு, கண் கருவிழி மூலம் சரிபார்த்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் பல ரேஷன் கடைகளில் கண் கருவிழி ஸ்கேன் செய்யும் கருவி பயன்பாட்டில் இல்லாமல் முடங்கியிருப்பதாக தெரிகிறது. இதனால், பல முதியவர்களின் சிறப்பு தொகுப்பு அவர்களுக்கு சென்று சேருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

உலகின் முதல் குளோன் ஹைபிரிட் அரிசி வகையை உருவாக்கிய சீனா
மக்களின் துயரத்தை துடைக்கும் போன் பூத்
வெனிசுலா அதிபரை பிடிக்க அமெரிக்க வீரர்கள் சென்ற காட்சி.. AI வீடியோ..
ரஷ்யக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. ரஷ்யா கடும் எதிர்ப்பு!