AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘உச்ச நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்” குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Tamil Nadu CM MK Stalin : தஞ்சாவூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், முக்கிய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது, உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

‘உச்ச நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்” குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Jun 2025 10:30 AM IST

சென்னை, ஜூன் 17 : உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்காடு மொழியாக தமிழ் (Tamil Language)  இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) கோரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூருக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 2025 ஜூன் 16ஆம் தேதியான நேற்று தஞ்சையில் திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர், அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசுகையில், “நாங்கள் பெருமையுடன் எங்களைத் தமிழர்கள் என்று அழைக்கிறோம். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி. நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தமிழை அனுமதிப்பதே அடுத்த கட்டமாக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கலைஞர் இது குறித்து ஒரு தீர்மானத்தை கூட நிறைவேற்றினார்” என்று தெரிவித்தார்.

“நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்”

பல ஆண்டுகளாகவே  தமிழக அரசு சார்பில் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. நாடாளுமன்றத்திலும் எம்.பிக்கள் இதுகுறித்து கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.

மத்திய அரசின் கூற்றுப்படி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் வரை 2,500க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும், 900 உயர்நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் புதுமணத் தம்பதிகளுக்கு  முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளையும் விடுத்தார்.

அதாவது, ” எதிர்காலத்தில் தமிழ்நாடு தனது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய அதிக குழந்தைகளைப் பெறுங்கள்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “தஞ்சாவூரில் ஒரு புதிய பல்கலைக்கழகம் அமைக்க ஒரு மசோதாவை நிறைவேற்றினோம்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஆளுநரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

அதனை ஆளுநருக்கு அனுப்பினோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு ஆளுநர் மாறியிருப்பார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் மாறவில்லை. மசோதா குறித்து பலமுறை நினைவூட்டல்களை அனுப்பியிருந்தோம். உயர்கல்வி அமைச்சர் கூட ஆளுநரிடம் சந்திப்பு கோரினார்.

ஆனால் இதுவரை அது வழங்கப்படவில்லை. மக்கள் விட ஆளுநருக்கு வேறு என்ன முக்கியமான வேலை இருக்கிறது. நாங்கள் மசோதாவை அனுப்பிய உடனேயே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தால், இந்த விழாவில் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்போம். நாங்கள் பொறுமையாக இருப்போம். நாம் பொறுமை இழந்தால், அவரை நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தும் ஒரு சூழ்நிலையை சட்டப்பூர்வமாக உருவாக்குவோம்” என்று கூறினார்.

 

Follow Us