Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரைவேக்காட்டு தனமாக அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி – முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்..

TN CM MK Stalin: செய்திகள் பார்க்காமல், படிக்காமல் அறிக்கை மூலம் அரசியல் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 2 நாள் பயணமாக தஞ்சை சென்ற அவர் நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரைவேக்காட்டு தனமாக அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி – முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்..
முதலமைச்சர் ஸ்டாலின்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Jun 2025 13:53 PM

தஞ்சாவூர், ஜூன் 16,2025: பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் குருவை சாகுபடி பாசனத்திற்காக கல்லணையிலிருந்து நீர் திறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்காக இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று ஜூன் 15 2025 அன்று தஞ்சை சென்றார். இன்றைய (ஜூன் 16,2025) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  செய்திகள் பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாக அரசியலை செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என விமர்சனம் செய்துள்ளார். நேற்றைய (ஜூன் 15 2025) தினம் ஐந்து லட்சம் ஏக்கர் குருவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தா.ர் அதனைத் தொடர்ந்து ரோடு ஷோ மேற்கொண்டு சாலையில் இருபுறமும் திரண்ட மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். பின்னர் தஞ்சையில் கலைஞர் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். இரண்டாம் நாளான இன்று (ஜூன் 16 2025) மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் செய்யும் எடப்பாடி – முதல்வர் ஸ்டாலின்:

இதில் ரூபாய் 1194 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், “ தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பயிர் பாசனத்திற்காக உரிய நேரத்தில் மேட்டூர் மற்றும் கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. தஞ்சையையும் கலைஞரையும் பிரித்துப் பார்க்க முடியாது.

காவிரி நீரை அனைத்து மாவட்டங்களும் பெற நடவடிக்கை மேற்கொண்டவர் கலைஞர் கருணாநிதி தான்.  தஞ்சையில் 70 கோடி ரூபாய் செலவில் மினி டைடல் பார்க் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி வரை செல்லக்கூடிய சாலை பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளன.

செய்திகள் பார்க்காமலும் படிக்காமலும் அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக கட்சியில் இருக்கக்கூடிய உட்கட்சி பிரச்சனை, கூட்டணி பிரச்சனை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை மறைக்க அறிக்கை அரசியல் செய்து வருகிறார். ஆனால் திமுக அப்படி இல்லை வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. பெட்டியின் சாவி தொலைந்துவிட்டதா என கேட்கிறார். அவரது எண்ணம் எல்லாம் பெட்டியில் தான் இருக்கிறது. கூட்டணி பிரச்சனையை மறைக்க அவர் அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை வெளியிட்டு வருகிறார்” என பேசியுள்ளார்.

மனம் நிறைந்த தஞ்சை பயணம்:

 

;

தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக டெல்டா அல்லாத மற்ற மாவட்ட உழவர் பெருமக்களும் பயனடைய 132 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கார் – குறுவை – சொர்ணவாரி பருவத்துக்கான சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளேன். 2,25,383 பயனாளிகளுக்கு 558 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என, தஞ்சை மக்களின் மனம் நிறைய அமைந்தது டெல்டா பயணம் என தெரிவித்துள்ளார்.