Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இரு நாட்களுக்கு ரெட் அலர்ட்.. நீலகிரி, கோவையில் கொட்டப்போகும் மழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu weather alert : கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 2025 மே 25,26ஆம் தேதிகளில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இரு நாட்களுக்கு ரெட் அலர்ட்.. நீலகிரி, கோவையில் கொட்டப்போகும் மழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
மழைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Published: 25 May 2025 06:24 AM

சென்னை, மே 25 : தமிழகத்தில் இரு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் (nilgiris coimbatore red alert) விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவையில் 2025 மே 25,26ஆம் தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம்  (tamilnadu weather alert) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மே மாத தொடக்கத்தில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் பருவமழை, 8 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கியுள்ளது. இதனால், கேரளா, கர்நாடகா, மகாராஷ்ரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

நீலகிரி, கோவையில் கொட்டப்போகும் மழை

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக்ததிலும் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அதன்படி, 2025 மே 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழக்ததில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மே 25,26ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 27ஆம் தேதி கோவை, நீலகிரியில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், 2025 மே 28ஆம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்மேற்கு கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 2025 மே 24ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கொங்கன் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் ரத்னகிரிக்கு வடக்கு வடமேற்கு 30 கி.மீ தொலைவில் நிலவுகிறது. இது மெதுவாக கிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி 2025 மே 27ஆம் தேதி உருவாக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை

அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை தொடர்ந்து, தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது. தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், கடலூர் ஆகிய துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காத்தியின் ஹிட் பட இயக்குநரிடம் கதை கேட்ட விக்ரம்?
காத்தியின் ஹிட் பட இயக்குநரிடம் கதை கேட்ட விக்ரம்?...
தலைமை காஜி சலாஹுத்தீன் அயூப் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
தலைமை காஜி சலாஹுத்தீன் அயூப் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்..!...
அனுராக் காஷ்யப்பின் நடிப்பைப் பாராட்டிய விஜய் சேதுபதி!
அனுராக் காஷ்யப்பின் நடிப்பைப் பாராட்டிய விஜய் சேதுபதி!...
நடுகடலில் விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல்.. 24 பேரின் கதி என்ன?
நடுகடலில் விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல்.. 24 பேரின் கதி என்ன?...
முதலிடத்திற்காக மோதும் குஜராத்.. வெற்றியுடன் கரை சேருமா சென்னை?
முதலிடத்திற்காக மோதும் குஜராத்.. வெற்றியுடன் கரை சேருமா சென்னை?...
ரூ.199-ல் அதிவேக இன்டர்நெட் வசதியை பெறுவது எப்படி? லிங்க் இதோ..!
ரூ.199-ல் அதிவேக இன்டர்நெட் வசதியை பெறுவது எப்படி? லிங்க் இதோ..!...
சோனியா அகர்வால் - விக்ராந்த் நடிப்பில் வெளியானது வில் பட டீசர்
சோனியா அகர்வால் - விக்ராந்த் நடிப்பில் வெளியானது வில் பட டீசர்...
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!...
சர்வதேச தரத்தில் உயரப்போகும் 4 தமிழக கடற்கரைகள் என்னென்ன?
சர்வதேச தரத்தில் உயரப்போகும் 4 தமிழக கடற்கரைகள் என்னென்ன?...
மதுரையில் கோர விபத்து... கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
மதுரையில் கோர விபத்து... கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு...
96 பாகம் 2 படத்தில் விஜய் சேதுபதி நாயகன் இல்லையா? வைரலாகும் தகவல்
96 பாகம் 2 படத்தில் விஜய் சேதுபதி நாயகன் இல்லையா? வைரலாகும் தகவல்...