இனி வெயில் கொளுத்த போகுது.. சென்னையில் எப்படி? லேட்டஸ்ட் வானிலை அப்பேட்
Tamil Nadu Weather Update : சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 04 : தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது (Tamil nadu weather update). அதோது, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வந்தது. குறிப்பாக, 2025 மே மாதம் முழுவதும் வெயிலின் தாக்கம் இல்லாமல், மழை கொட்டித் தீர்த்தது. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. 2025 மே 30ஆம் தேதி வரையுமே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையிலும் கூட விட்டுவிட்டு மழை பெய்தது. 2025 ஜூன் 1ஆம் தேதியில் இருந்து மழை குறைந்ததால், வெயில் மீண்டும் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.
இனி வெயில் கொளுத்த போகுது
இதற்கிடையில், சென்னையில் 2025 ஜூன் 3ஆம் தேதி மாலை சட்டென மழை கொட்டித் தீர்த்தது. வடபழனி, எழும்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.




அதன்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 2025 ஜூன் 4ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், 2025 ஜூன் 4ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானிலை எப்படி?
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான
தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuULiL pic.twitter.com/smV6DhsJ4a— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 3, 2025
அதோடு, அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் 2025 ஜூன் 4ஆஅம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 37 – 38 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 39.4 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை தருமபுரி மற்றும் கரூர பரமத்தியில் 23 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.