Ajith Kumar : அடேங்கப்பா விலை இவ்வளவா? புது ரேஸ் காரை வாங்கிய அஜித் குமார்!
Ajith Kumar Bought New Race Car : தென்னிந்திய சினிமாவில் நடிப்பு மற்றும் கார் ரேஸ் என இரு துறையிலும் சாதனை படித்து வருபவர் அஜித் குமார். திரைப்படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து, உலகநாடுகளில் நடக்கும் கார் ரேஸிலும் கலந்துகொண்டு வருகிறார். மேலும் தற்போது நடிகர் அஜித் குமார் புதிதாக ரேஸ் கார் ஒன்றை `வாங்கியுள்ளார். அதன் விலை பற்றி விவரங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் இந்த திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் முன்னணி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணனும் (Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தார். இந்த 2025ம் ஆண்டு அஜித்தின் நடிப்பில் வெளியான 2வது திரைப்படமாக அமைந்தது இந்த குட் பேட் அக்லி. இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் கலந்துகொள்ளத் தொடங்கினார். கடந்த 2025, ஜனவரி மாதம் முதல் உலக நாடுகளில் நடிக்கும் கார் ரேஸ் (Car race) பந்தயத்தில் கலந்துகொள்ளத் தொடங்கினார். இந்தியாவின் சார்பாக முதலில் 2025, ஜனவரியில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்துகொண்டார்.
இதில் இரண்டாவது இடத்தை பிடித்தார். அதை தொடர்ந்து இத்தாலி மற்றும் ஐரோப்பா போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸிலும் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு , வெற்றிக் கோப்பைகளைப் பெற்றார். மேலும் நடிகர் அஜித் குமார் தற்போது புதிய ரேஸ் கார் (New Race Car) ஒன்றை வாங்கியுள்ளாராம். அந்த ரேஸ் காருடன் இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.




அந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா ? அந்த ரேஸ் காரின் விலை சுமார் ரூ 10 கோடிகள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான தகவலைத் தினத்தந்தி செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த தகவலானது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
அஜித்தின் கார் ரேஸ் எக்ஸ் தள பதிவு :
Senna brought to life with Ajith Kumar bringing the Mc Laren Senna home!#ajithkumar pic.twitter.com/Pu3SzHstnu
— Ajithkumar Racing (@Akracingoffl) June 4, 2025
நடிகர் அஜித் குமார் வாங்கியிருக்கும் இந்த புதிய காரின் விலை சுமார் ரூ. 10 கோடிகள் என்று கூறப்படுகிறது. தற்போது அஜித் காருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் அஜித் குமார் பிரான்சில் நடைபெறவுள்ள கார் ஜிடி-24 என்ற ரேஸிற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த பயிற்சி தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் அஜித் குமார் இந்த ஆண்டு 2025, நவம்பர் மாதத்தில்தான் புதிய படத்தில் இணையவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அஜித்தின் புதிய திரைப்படம்
குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், அஜித் சமீபத்தில் பேசிய பேட்டி ஒன்றில், தனது லக்கி இயக்குநர் மற்றும் லக்கி தயாரிப்பு நிறுவனத்துடன் தனது அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறேன் என்றும், அப்படத்தின் ஷூட்டிங் 2025, நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.
நடிகர் அஜித் குமார் லக்கி இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் என்று கூறியது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மை தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது