Vetrimaaran : வாடிவாசல் திரைப்படம் டிராப்பா? வெற்றிமாறனுடன் இணையும் பிரபல நடிகர்?
Vetrimaaran New Movie Update : இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை 2 படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படத்திற்கான வேலை நடந்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் வெற்றிமாறன் பிரபல நடிகர் ஒருவருடன் புதிய படத்தில் மிக விரைவில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவர் தனுஷின் (Dhanush) பொல்லாதவன் (Pollathavan) படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்தார். அதைத் தொடர்ந்து பல நடிகர்களுடன் படங்களை இயக்கி வெற்றி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் விடுதலை பார்ட் 2 (Viduthalai Part 2). இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் (Suriya) வாடிவாசல் (Vaadivaasal) படத்தை இயக்கவிருப்பதாகக் கூறினார். மேலும் பல நேர்காணல்களில் சந்தித்துப் பேசிய வெற்றிமாறன் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்றும், படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகள் நடந்துவருவதாகவும் கூறினார்.
ஆனால் அந்த படத்திற்கு முன்னே மற்றொரு நடிகருடன் புதிய படத்தில் இணையவிருப்பதாகத் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது வேறு யாருமில்லை நடிகர் சிலம்பரசன்தான் (Silambarasan). நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் புதிய படத்தை இயக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகிறது.




தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
அகிலம் ஆராதிக்க “வாடிவாசல்” திறக்கிறது#VetriMaaran @Suriya_offl#VaadiVaasal pic.twitter.com/ZPWfCDkF3C
— Kalaippuli S Thanu (@theVcreations) January 15, 2025
சிலம்பரசனுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன் :
நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் சமீபத்தில் தக் லைஃப் படமானது வெளியாகியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து STR 49, 50 மற்றும் 51 என அடுத்தடுத்த படங்களைத் தனது கைவசம் வைத்துள்ளார். மேலும் சமீபத்தில் டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தில் ED ரெய்டு நடந்த நிலையில், STR 49 படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவலின்படி , இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் புதிய படத்தில் இணையாவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை வி க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் கலைப்புலி எஸ் தாணுதான் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் உண்மையா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
சூர்யாவுடன் வாடிவாசல் :
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் இந்த வாடிவாசல் படத்தின் அறிவிப்புகள் கடந்த 2022ம் ஆண்டிலே வெளியானது. அதைத் தொடர்ந்து வெற்றிமாறனும் அடுத்தடுத்த படங்களில் பிஸியான நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போனது.
இதைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் இந்த 2025ம் ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகும் என்று கூறப்பட்ட நிலையில், மேலும் இப்படம் தள்ளிப்போவதாகவும் இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகிறது. சூர்யா தெலுங்கு இயக்குநருடன் படத்தில் நடித்துவரும் நிலையில், இது குறித்து விரைவில் வெற்றிமாறன் விளக்கம் கொடுப்பார் என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன.