நவம்பர் 22 முதல் 25 வரை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Heavy Rain Alert : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவுள்ளதாகவும் அது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்குத்-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது

மாதிரி புகைப்படம்
சென்னை, நவம்பர் 19 : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், வரும் நவம்பர் 22ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை (Heavy Rain)பெய்யும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. குறிப்பாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவுள்ளதாகவும் அது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தனது அறிவித்துள்ளது. குறிப்பாக அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரத்தையும் அறக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
- குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவம்பர் 19, 2025 அன்று காலை 8.30 மணி அளவில் லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் எனவும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியிலும், அதை ஒட்டிய இடங்களிலும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவி வருகிறது.
- இதனையடுத்து நவம்பர் 19, 2025 அன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது. அதே போல கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : +2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!
- மேலும், நவம்பர் 20, 2025 அன்று நாளை மாநிலம் முழுவதும் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.
- அதே போல நம்பர் 21, 2025 அன்று தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.
- மேலும், நவம்பர் 22, 2025 அன்று சனிக்கிழமை கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், உள் மாவட்டங்களில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 23, 2025 அன்று தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : குளுகுளுவென மாறிய சென்னை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை..
- நவம்பர் 24, 2025 அன்று இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.
- நவம்பர் 25, 2025 அன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.