கோவை, நீலகிரிக்கு அலர்ட்.. பிச்சு உதறபோகும் மழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் நிலையில், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்க உள்ள நிலையில், அதனை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்.

கோவை, நீலகிரிக்கு அலர்ட்.. பிச்சு உதறபோகும் மழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

மழை

Updated On: 

23 May 2025 07:01 AM

 IST

சென்னை, மே 23 : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் (Nilgiri coimbatore heavy rain alert) மாவட்டத்தின் மலைப் பகுதிகளுக்கு கனமழை பெய்ய  (Tamil nadu weather update) வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் தணிந்து, கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மே மாதம் தொடக்கத்தில் இருந்தே மழை பெய்து வருகிறது. மே மாதத்தில் அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் இல்லை. இதற்கிடையில், தென் மாவட்டங்கள், டெல்டா, கொங்கு, வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அரபிக் கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்கிடையில், கேராளவில் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.

கோவை, நீலகிரிக்கு கனமழை அலர்ட்

இதனால், கேரளாவை ஓட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். கோவா – தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி 2025 மே 22ஆம் தேதியான நேற்று உருவானது.

இந்த காற்றழுத்தம் வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 27ஆம் தேதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 மே 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, 2025 மே 24ஆம் தேதி 26ஆம் தேதி வரை நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லேட்டஸ்ட் வானிலை அப்டேட்


சென்னையை பொறுத்தவரை, 2025 மே 23ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2025 மே 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும். இதனால், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
மானாமதுரையில் கைதி லாக் அப் டெத்… 6 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை… டிஐஜி சரவணன் அதிரடி உத்தரவு!
Durai Murugan Tamil Nadu Election: காட்பாடி தொகுதியில் தொடர் வெற்றிக்கு சொந்தக்காரர்.. மீண்டும் வெற்றியை தனதாக்கி கொள்வாரா துரைமுருகன்!
கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை: தமிழகத்தில் திருமணங்கள் பாதிக்குமா? – வெளியான தகவல்
சட்டமன்ற தேர்தல்… திமுகவுக்கு தண்ணி காட்ட பலே திட்டம்… விஜய் எடுக்கும் புதிய பார்முலா..!
லஞ்ச புகார்.. சார்-பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த ஊழல் தடுப்பு போலீசார்.. அடுத்து நடந்த சம்பவம்!
‘உங்களை டிஜிட்டல் கைது செய்கிறோம்’ – ஒரு அழைப்பில் ரூ.10 லட்சம் பறித்த சைபர் கும்பல்
அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜின் படத்துக்கு அனிருத்தின் சம்பளம் இவ்வளவா?
பிரபாஸ் மற்றும் எகோ பட இயக்குநர் சந்திப்பு
தன்னை தாக்க வந்த சிறுத்தையை கற்களால் அடித்து கொன்ற 18 வயது இளைஞர்..
வாடிக்கையாளரை தாக்கிய ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. நடந்தது என்ன?