எஸ்ஐஆர் பணி…தமிழகத்தில் 77 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு?
Tamil Nadu Sir Work: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளால் (எஸ்ஐஆர்) சுமார் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. யார் யார் நீக்கப்படுவார்கள் என்று இந்தச் செய்தியில் விரிவாக பார்க்கலாம் .

77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
தமிழகத்தில் 2026- ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் எந்த அளவு முடிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான தகவல்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள் தொடர்பான விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இதில், எத்தனை வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து அளித்துள்ளனர். இறந்தவர்கள் எத்தனை பேர், ஒரிடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு மாறி சென்றவர்கள் எத்தனை பேர் என்பன உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. அவர்கள் நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் 77 லட்சம் பேர் நீக்கம் செய்ய வாய்ப்பு
இதில், சென்னையில் மட்டும் 10. 40 லட்சம் பேர் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 77 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறாமல் இருந்ததால் இறந்தவர்கள், இரு இடங்களில் வாக்குரிமை உள்ளவர்கள், இடம் பெயர்ந்து சென்றவர்கள் என்பன உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்படாமல் இருந்தது. எனவே, டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி சுமார் 77 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க: பாமக உரிமை கோரல் வழக்கு…அன்புமணிக்கு வந்த குட் நியூஸ்!
யார் யார் நீக்கம் செய்யப்படுபவர்
சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிகள் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அந்த வாக்காளர்களும் நீக்கப்பட உள்ளனர். இவற்றை அரசியல் கட்சியினர் மற்றும் பி எல் ஓக்கள் கண்காணித்து முறையிடலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, மழைக்காலம் என்பதால் சில வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்காமல் உள்ளனர். இதே போல, மழைக்கால பணிகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களும் தரவுகளை பதிவு செய்யாமல் உள்ளனர். வரும் டிசம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் நீக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதில், சுமார் 50 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்படலாம் என்று தெரிகிறது.
புதிய வாக்காளர்கள் இணையலாம்
டிசம்பர் 16- ஆம் தேதிக்கு பிறகும் புதிய வாக்காளர்கள் சேர விரும்பினால் படிவம் 6- ஐ பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும். அவர்கள் பட்டியலில் இடம் பெறுவதுடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: பாமகவை அன்புமணி உரிமை கோர முடியாது…ஜி.கே.மணி!